கங்குவா காலியானாலும் அடுத்தடுத்து படங்களை புக் பண்ணும் சூர்யா!.. இதோ லிஸ்ட்!...
Actor Suriya: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்கள் கழித்து தியேட்டரில் வெளியான படம்தான் கங்குவா. அதற்கு முன் சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய 2 படங்களும் ஓடிடியில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததோடு சூர்யாவின் மீது ரசிகர்களுக்கு இருந்த இமேஜையும் மாற்றியது.
கலங்கடித்த கங்குவா:
கமர்ஷியல் கதை மட்டுமின்றி சிறந்த கதைகளிலும் தன்னால் நடிக்க முடியும் என காட்டியிருந்தார் சூர்யா. அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருந்தார். சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் வெப் சீரியஸை இன்ஸ்பிரேஷனாக கொண்டு இப்படத்தின் கதையை எழுதியிருந்தார் சிவா.
தமிழில் இப்படி ஒரு கதைக்களத்தோடு இதுவரை ஒரு படம் வெளிவந்தது இல்லை. சூர்யாவும் சிறப்பாக நடித்திருந்தார். அசத்தலான சண்டைக்காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால், படத்தின் முதல் அரைமணி நேர்த்தில் இடம் பெற்றிருந்த மொக்கை காட்சிகள், படம் முழுக்க பின்னணி இசை என்கிற பெயரில் போடப்பட்டிருந்த அதிக சப்தங்கள் ரசிகர்களை எரிச்சலாக்கியது.
திட்டிய ரசிகர்கள்:
அதோடு, படத்தின் கதை, திரைக்கதையும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்த ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றினார்கள். பெரும்பாலானோர் இப்படம் பற்றி நெகட்டிவாக பேசவே படத்தின் வசூல் கடுமையாக பாதித்தது.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யாவும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் படம் பற்றி பில்டப் செய்தார்கள். அதிலும் ஞானவேல் ராஜாவோ கங்குவா படம் 1000 கோடியை வசூலிக்கும் என சொன்னார். ஆனால், ரிசல்ட்டோ வேறுமாதிரி ஆகிவிட்டது.
கார்த்திக் சுப்பாராஜ்:
கங்குவா ரிசல்ட் சூர்யாவின் கடுமையாக அப்செட் ஆக்கியிருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருகிறார். கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அவரின் 44வது திரைப்படமாகும். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது துவங்கியிருக்கிறது. அடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாடத்திலும் நடிக்கவிருக்கிறார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் 3 மாதங்கள் ஆகும் என கணிக்கப்படுகிறது. எனவே, அப்படத்திற்கு முன் வேறு ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
வாடிவாசல்:
இந்த படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் உருவாகவுள்ளது இந்த படத்தை அமல் நீரட் என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் மலையாளத்தில் ஏற்கனவே சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் வேலையை 45 நாட்களுக்குள் முடித்துவிடுவார்களாம். எனவே, இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா வாடிவாசல் படத்திற்கு போவார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் அமல் மீரட் தலைநகரம் படத்தில் நடித்த நடிகை ஜோதிர்மயீ-வின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.