கேம் சேஞ்சர் படத்துல முதல்ல நடிக்க இருந்தது விஜய்யா?.. கடைசில இப்படி பண்ணிட்டாரே ஷங்கர்!..

by Ramya |
shankar
X

shankar

கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஷங்கர். இவரது திரைப்படங்கள் என்றாலே மிகவும் பெரியளவில் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவரை தோல்வியை கண்டிராத இயக்குனராக வளம் வந்த சங்கருக்கு மிகப்பெரிய பேரடியை கொடுத்தது இந்தியன் 2 திரைப்படம் தான்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் மனம் தளராத சங்கர் தொடர்ந்து படங்களை இயக்கி வருகின்றார். அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதையை தனக்கு ஏற்றது போல் மாற்றி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு தயாரானார் ஷங்கர்.


தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம்சரணை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து இருக்கின்றார். மேலும் எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கலந்த காமெடி கதையாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் ராம்சரண் கடைசியாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடமும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கின்றார். இந்த படத்தின் மீது ராம்சரண் ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் சங்கர் இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றார்.

இந்தியன் 2 திரைப்படத்தால் ஏற்பட்ட தோல்வியை சரி செய்வதற்கு கேம் சேஞ்சர் திரைப்படம் உதவியாக இருக்கும் என்று மலைபோல் நம்பி இருக்கின்றார். கேம் சேஞ்சர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

முதலில் இப்படத்தின் ஆடியோ லான்ச் அமெரிக்காவில் நடந்து முடிந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் நடக்க இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும், சென்னையிலும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. சென்னையில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறாராம்.


அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜயிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் இப்படம் குறித்து மற்றொரு சுவாரசிய தகவலும் வெளிவந்திருக்கின்றது. அதாவது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதையை முழுவதுமாக முடித்தவுடன் ஷங்கர் நடிகர் விஜயை சந்தித்துதான் இப்படத்தின் கதையை கூறியிருந்தாராம். கதையும் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனது .

ஆனால் இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்திற்காக ஒன்றரை வருடங்கள் கால்சீட் கேட்டிருக்கின்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் பின்வாங்கி விட்டார். அதனை தொடர்ந்து தான் தெலுங்கில் ராம் சரணை வைத்து இப்படத்தை இயக்கினாராம் ஷங்கர். கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஒரு தொடர்பு இருப்பதால் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

Next Story