இதுதான் ஃபார்ஸ்ட் டைம்!. என்னை கல்லால் அடிக்காதீங்க!.. கோரிக்கை வைத்த விஷால்!...
Actor vishal: பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருபவர் விஷால் செல்லமே என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் சண்டக்கோழி, திமிறு போன்ற படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார். இவரின் அப்பாவே பிரபல தயாரிப்பாளராக இருந்ததால் விஷாலும் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார்.
ஒருபக்கம் சிம்புவை போலவே இவர் மீது பல புகார்கள் இருந்தது. ஷூட்டிங்குக்கு சரியாக வரமாட்டார், ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்க மாட்டர், ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் இவருக்காக காத்திருந்தால் விஷால் வீட்டில் தூங்கி கொண்டிருப்பார் என்றெல்லாம் சொல்லுவார்கள்.
விஷால் தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் நடிகர் இல்லை. அதுவும் கடந்த சில வருடங்களாகவே அவரின் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது. இடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் மட்டுமே அவருக்கு ஹிட் அடித்தது.
மதகஜ ராஜா: தற்போது விஷால் எந்த படத்திலும் நடிக்கவிலை. இந்த நிலையில்தான் சுந்தர்.சியின் இயக்கத்தில் அவர் 12 வருடங்களுக்கு முன்பு நடித்த மதகஜ ராஜா படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் விஷாலை பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். ஏனெனில், மைக்கை பிடித்திருந்த அவரின் கைகள் நடுங்கிகொண்டே இருந்தது. அதோடு, பேசமுடியாமலும் சிரமப்பட்டார். அவருக்கு காய்ச்சல் என்று மேடையில் சொன்னார்கள்.
இதனைத் தொடர்ந்து ‘விஷாலுக்கு என்னாச்சி?’ ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் அக்கறை காட்டினார்கள். ஒருபக்கம், மதகஜ ராஜா படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டும் அடித்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விஷாலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. மருத்துவர்களின் சிகிச்சையை விட இந்த வெற்றி மனரீதியாக அவருக்கு உந்துதலை கொடுத்துள்ளது.
பாடகராக விஷால்: இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விஷால் ‘மதகஜ ராஜா படத்தில் நான் பாடிய மை டியர் லவர் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் நான் அந்த பாடலை பாடவிருக்கிறேன். இதுதான் என் முதல் கான்சர்ட்.. இது நான் கனவிலும் நினைத்திராத ஒன்று.. ரசிகர்கள் கல்லெறிய மாட்டார்கள் என நம்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இந்த நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கிறது.