விஜய்க்கு எல்லாமே டூப்புதான்டா!.. களமிறங்கிய ரஜினி ஃபேன்ஸ்!. ஒரே கலவரமா இருக்கே!...
Rajini Vijay :நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான படம்தான் ஜெயிலர். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 650 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இவ்வளவு பெரிய வெற்றியாகும் என ரஜினியே எதிர்பார்க்கவில்லை. இந்த படம் கொடுத்த வசூலால் ரஜினிக்கு பேசிய சம்பளத்தை விட 30 கோடியை அன்பளிப்பாக கொடுத்தார் கலாநிதிமாறன். அதோடு, ஒரு விலை உயர்ந்த காரையும் அவருக்கும், நெல்சனுக்கும் பரிசளித்தார்.
இப்போதெல்லாம் ஒரு படம் சூப்பர் ஹிட் என்றால் அதன் 2ம் பாகத்தை எடுப்பது வழக்கமாகிவிட்டது. அதன்படி ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. ஆனால், இன்னமும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஏனெனில், லோகேஷின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்த பின்னரே ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோவை ரிலீஸ் செய்தார்கள். அதில், ரஜினியின் கை, கால்களை மட்டும் காட்டினார்கள். இறுதிக்காட்சியில் மட்டுமே ரஜினியை காட்டினார்கள். இதைத்தொடர்ந்து இறுதியில் காட்டப்படுவது மட்டுமே ரஜினி. மற்றதெல்லாம் டூப் என சிலர் சொல்ல விஜய் ரசிகர்களை அதை கையில் எடுத்து ரஜினியை எக்ஸ் தளத்தில் ட்ரோல் செய்ய துவங்கினார்கள். ஊர்க்காவலன் படத்தில் குதிரை ஓட்டும் காட்சிகளில் எல்லாமே டூப் என அப்படத்தின் இயக்குனர் மனோபாலா பேசிய வீடியோ பகிர்ந்தார்கள்.
இதற்கிடையில், ஜெயிலர் 2 புரமோவின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. எனவே, அதில் டூப் நடிக்கவில்லை. ரஜினிதான் நடித்தார் என ரஜினி ரசிகர்கள் சொல்ல துவங்கினார். இந்நிலையில், விஜய்க்கு பல படங்களிலும் டூப் போட்ட யூசூப் என்பவர பேசும் வீடியோவை தேடிக்கண்டுபிடித்து ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
துப்பாக்கி, தெறி, பிகில், பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் இந்த யூசுப் விஜய்க்கு டூப் போட்டிருக்கிறார். 'விஜய்க்கு குளோஸ் அப் மட்டும்தான். மற்றபடி எல்லாம் செய்வது இந்த யூசுப்தான். ஆனால், விஜய் ஃபேன்ஸ் வெக்கமே இல்லாம 74 வயசுல நடிக்கிற ரஜினியை டூப் சொல்றானுங்க' என பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் ரசிகர்கள் முன்பெல்லாம் அஜித் ரசிகர்களுடன் சண்டை போட்டு வந்தார்கள். ஜெயிலர் பட விழாவில் ரஜினி எப்போது கழுகு - காக்கா கதையை சொன்னாரோ அதிலிருந்து ரஜினி ரசிகர்களுடன் சண்டை போட துவங்கிவிட்டனர். இப்போது டூப் விஷயத்தை வைத்து சண்டை போட துவங்கிவிட்டனர்.
சினிமாவில் டூப் என்பது பல வருடங்களாக பின்பற்றப்படும் விஷயம். ஒரு ரிஸ்க்கான காட்சியில் ஹீரோ நடித்து அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே டூப்பை பயன்படுத்துவார்கள். அதாவது அந்த நடிகரை போலவே தோற்றம் கொண்ட ஒருவரை தேர்ந்தெடுத்து முகத்தை காட்டாமல் காட்சிகளை எடுப்பார்கள். இதுதான் இப்போது ரஜினி - விஜய் ரசிகர்களிடசியே ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.