‘வத்தலகுண்டு குண்டு குண்டு’ மந்த்ராவா இது? சினிமாவை விட்டு போக காரணமே இதுதானாம்..

maரம்பா, தேவயாணி இவர்கள் வரிசையில் 90களில் ஒரு டாப் நடிகையாக இருந்தவர் நடிகை மந்த்ரா. ஆனால் இவரை பற்றி சமீபகாலமாக எந்தவொரு செய்தியும் வரவில்லை. மீண்டும் தமிழில் ஒரு படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க போகிறார் மந்த்ரா. கவர்ச்சி நாயகியாக ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர் மந்த்ரா. ஹீரோயினாக இருந்தாலும் க்ளாமர் ஹீரோயினாகத்தான் ரசிகர்களிடம் பரீட்சையமானார்.

அருண்விஜய் நடிப்பில் வெளியான ப்ரியம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மந்த்ரா அவர் 6 மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தாராம். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறாராம். இப்போது கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக இருக்கும் அஜித் , விஜய் இவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் மந்த்ரா.

ரெட்டை ஜடை வயசு படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் லவ் டுடே படத்தில் விஜய்க்கு தோழியாகவும் நடித்திருப்பார். அவர் நடித்த படங்களிலேயே லவ் டுடே படம் மிகவும் பிடித்த படமாகும் என்று கூறியிருக்கிறார். அஜித்தை பொறுத்தவரைக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் மந்த்ரா அஜித்தை பார்த்துக் கொண்டே இருப்பாராம். அந்தளவுக்கு பார்க்க அழகாக இருப்பார் அஜித் என கூறியிருக்கிறார்.

அதனால் தான் கவர்ச்சி பாடலாக இருந்தாலும் அஜித்துக்காக ராஜா படத்தில் வத்தலகுண்டு பாடலுக்கு ஆட ஒப்புக் கொண்டேன் என்று கூறினார். மேலும் சிம்ரன், ரம்பா எல்லாருமே எனக்கு நெருக்கமான தோழிகள் என்றும் கூறினார். தெலுங்கில் வெளியான அருந்ததீ படத்தில் மந்த்ராதான் நடிக்க வேண்டியதுதான். ஆனால் அதற்குள் அவர் திருமணம் செய்து செட்டிலாகி விட்டதால் அந்த வாய்ப்பு பறிபோனது என கூறினார்.

மேலும் நடிகர் தனுஷ் மந்த்ராவின் க்ளாஸ்மேட் என்றும் கூறினார். அவர் கடைசியாக ஓடிடியில் பார்த்த படம் கூட ராயன் திரைப்படம்தான் என கூறினார். மேலும் தமிழில் நடித்த அத்தனை படங்களிலும் க்ளாமராகவே நடித்திருப்பீர்கள்? ஏன் அப்படி என அவரிடம் கேட்டபோது, ‘முதல் படத்திலேயே அப்படி பச்சைக் குத்திவிட்டது போல் ஆகிவிட்டது. ஆனால் நான் டீ சர்ட், பேண்ட், ஸ்லீவ் எதுவுமே போடமாட்டேன். சேலைதான் அதிகம் கட்டுவேன்’

‘எனக்கு மாடர்னாக டிரெஸ் போட பிடிக்காது. அதனால்தான் தெலுங்கில் ஒரு படத்தில் கூட க்ளாமராக நடித்திருக்கமாட்டேனே. ஒரு மழை காட்சியில் கூட நடித்திருக்கமாட்டேன். நடித்தால் அங்கு உள்ளவர்கள் திட்டுவார்கள். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் என்னை அப்படி பார்க்கவில்லை.’ என கூறினார். தெலுங்கை பூர்வீகமாக கொண்ட மந்த்ராவை தமிழ் சினிமா அதன் பிறகு அழைக்கவே இல்லை என்றும் வருத்தப்பட்டார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it