விஜய்க்கு ஜோடின்னு நினைச்சு ஏமாந்த நடிகை... 90களில் இவர் தான் கவர்ச்சி கன்னி
90களில் 'கும்'முன்னு இருக்குற நடிகை மந்த்ரா. விஜயுடன் லவ் டுடே, அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசுன்னு பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்த பிரியம் படம். இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விஜய் படம் ஒன்றில் இவர் ஹீரோயினாகத் தான் நடிக்கப் போறோம்னு ஆசையா இருந்தாராம். ஆனால் நடந்ததே வேற என்று தன் ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
லவ் டுடே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சௌத்ரி சார் தான் படத்துல நடிக்க அழைச்சாங்க. ஆனா எனக்கு ப்ரண்டு கேரக்டர்ங்கறது தெரியாது. படம் பார்த்துட்டு பிரிவியுல அப்பாக்கிட்ட அழுதுட்டேன். ஏன்னா அந்த டைம்ல நான் ஹீரோயினா நடிச்சிக்கிட்டு இருந்தேன். பிரியம் படம் நல்லா போகலைன்னாலும் ஆவரேஜ் பிலிமா இருந்தா கூட சாங்ஸ் எல்லாம் ஹிட்.
நான் வந்து அப்போ ஆடியன்ஸ்கிட்ட ரொம்ப ரீச்சாகி இருந்தேன். நான் எதிர்பார்க்கலப்பா. இந்தப் படத்துல லாஸ்ட்ல கூட பிரண்டா தான் வச்சிட்டாங்கன்னு. ஆனா அந்தக் கேரக்டர் ரொம்ப நல்லா ரீச்சாகி இருந்தது.
என் படத்தை நானே பார்க்க மாட்டேன். ஏன்னா எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு. உன் படத்தை நீயே பார்த்துக்கிட்டு இருந்தேனா அந்தப் பெருமை உன் தலைக்கு ஏறிடும். அது வேற எங்கேயோ கொண்டு போயிடும். ஒருவாட்டி வேணா எப்படி நடிச்சிருக்கன்னு பார்த்துக்கலாம்.
அப்புறம் அப்போ நான் எப்படி எல்லாம் நடிச்சேன்னு ஞாபகங்கள் வந்துடும்னு அடிக்கடி சொல்வாரு. அதனால என் படத்தை நானே பார்க்க மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1996ல் என்.பாண்டியன் இயக்கிய படம் பிரியம். அருண் விஜய்க்கு ஜோடியாக மந்த்ரா நடித்து இருந்தார். வித்தியாசாகர் இசையில் ஆதாம் ஏவாள், தில் ரூபா காதல் வலை, ஒரு கேள்வி, துள்ளி வரும், உடையாத வெண்ணிலா ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
1997ல் பாலசேகரன் இயக்கிய படம் லவ் டுடே. விஜய், சுவலட்சுமி, மந்த்ரா, ரகுவரன், கரன், சிம்ரன், தாமு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். ஏன் பெண்ணென்று, என்ன அழகு, குப்பாயி, சலாமியா, மோனிகா ஆகிய பாடல்கள் உள்ளன.
1997ல் அஜீத்துக்கு ஜோடியாக ரெட்டை ஜடை வயசு படத்தில் மந்த்ரா நடித்துள்ளார். சி.சிவகுமார் இயக்கிய இந்தப் படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.