நயன்தாராவுக்கு இணையா பவர்ஃபுல்லான கேரக்டர்.. மூக்குத்தி அம்மன் 2வில் இணையும் அஜித் பட நாயகி

வெற்றியடைந்த முதல் பாகம்: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதுவரை வெளியான பக்தி படங்களிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு பக்தி படமாக இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் இருந்தது .காமெடி, மக்கள் எந்த அளவு மூடநம்பிக்கைகளில் விழுந்து கிடக்கிறார்கள் என்பதை விளக்கும் விதமாக நகைச்சுவையாக இந்த படத்தை கொடுத்திருப்பார் ஆர் ஜே பாலாஜி.
திடீர் திருப்பம்: மூக்குத்தி அம்மனாக நயன்தாரா அட்டகாசமாக கலக்கியிருப்பார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியது .படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இதனுடைய இரண்டாம் பாகத்தையும் ஆர்ஜே பாலாஜி தான் இயக்குவதாக இருந்தது .ஆனால் திடீர் திருப்பமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.
தடபுடலாக நடக்கும் பூஜை: அதன் பிறகு சுந்தர் சி இந்த படத்தை இயக்கப் போகிறார் .படத்தின் பூஜை இன்று பிரசாத் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக பூஜைக்கான வேலைகளில் ஐசரி கணேஷ் தீவிரமாக இறங்கினார் .பூஜையே பிரம்மாண்ட அளவில் நடத்த வேண்டும் என்பது ஐசரி கணேசனின் எண்ணம். அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தன. அதற்கான பத்திரிக்கை அழைப்பிதழ்களையும் பிரம்மாண்டம் ஆக்கினார் ஐசரி கணேஷ்.
இந்திய சினிமாவே வியக்கும் படம்: கமல் ரஜினி சுந்தர் சி என திரையுலகில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் சில பேர்களுக்கு நேரடியாக போய் அழைப்பிதலை கொடுத்து வந்தார் ஐசரி கணேஷ். இந்த நிலையில் இன்று பிரசாத் ஸ்டூடியோவில் இந்த படத்தின் பூஜை நடந்து வருகிறது. மேடையில் பிரம்மாண்டமான அளவில் அம்மன் சிலையையும் வைத்து படத்தின் பூஜை போடப்பட்டிருக்கிறது. இதில் சுந்தர் சி மேடையில் பேசும்பொழுது இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். நான் எடுத்த படங்களிலேயே மிகவும் பிரம்மாண்ட படமாக இந்த படம் அமையும் எனக் கூறியிருந்தார்.
பவர்ஃபுல்லான கேரக்டர்: மேலும் இந்த படத்தில் நயன்தாரா போக மற்ற நடிகர்கள் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை பற்றியும் சுந்தர்சி தெரிவித்திருக்கிறார். அதில் மூக்குத்தி அம்மனுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர் இரண்டு பேர் இருக்க வேண்டும். அதிலும் ஒரு ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அப்படி நினைத்ததும் என் மனதில் தோன்றியது இவர்தான் .
அழகு மட்டும் இல்லாமல் திறமையும் பர்சனாலிட்டியும் இருக்கிற நடிகையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி வந்தவர் தான் நடிகை ரெஜினா என அந்த மேடையில் கூறினார் சுந்தர் சி .அவர் கூறுவதில் இருந்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவுக்கு இணையான ஒரு கேரக்டராக ரெஜினாவின் கதாபாத்திரம் அமையப்போகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. கூடவே கன்னட இயக்குனரும் நடிகருமான துனியா விஜயும் நடிக்கிறாராம். இவர் இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க போகிறார் என சுந்தர் சி கூறியிருக்கிறார்.