ரஜினியின் மாஸ் என்னானு தெரியாம கிண்டல் பண்ண நடிகை.. தெரிய வச்சிருவாங்கள ரசிகர்கள்

தமிழ் சினிமாவே போற்றும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் அவருடைய மாஸ் குறையாத அளவு தன்னுடைய இமேஜை பாதுகாத்து வருகிறார். இன்று அவருடைய படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றன. எத்தனையோ இளம் நடிகர்கள் வந்தாலும் இவருடைய மார்க்கெட்டை யாராலும் தொட முடியவில்லை. ஏன் இதற்கு அடுத்தபடியாக வந்த விஜய் அஜித் கூட இவருக்கு பின்னாடி தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தன்னுடைய மார்கெட்டை நிலை நிறுத்தி வருகிறார் ரஜினி.
இன்னொரு பக்கம் ஆன்மீகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இன்று பல இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில் ரஜினியின் மாஸ் என்ன என்பதை பற்றி தெரியாத ஒரு நடிகை அவர் முன் கால் மீது கால் போட்டு அவருடைய நடனத்தையும் கிண்டல் அடித்த சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதைப்பற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். 90களில் அனைவருக்கும் பிடித்த நடிகையாக இருந்தவர் ரூபிணி. ரஜினி, கமல் ,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர்.
தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இந்தியிலும் இவர் ஒரு பிசியான நடிகையாக இருந்தவர் .இவருடைய அப்பா ஒரு வழக்கறிஞர். அம்மா மருத்துவர். அதனால் சினிமாவே என்னன்னு தெரியாத ஒரு நடிகையாக தான் வந்தார். அதனால் அவருடைய அம்மா இவருக்கு நடனம் கற்றுக் கொடுக்க வேண்டும் என பரதநாட்டியம் கூச்சுப்புடி என பயிற்சியில் சேர்த்தார். ரூபிணியும் பாக்யராஜ் மனைவியும் நடிகையுமான பூர்ணிமாவும் தோழிகள். அதனால் பாக்கியராஜ் இயக்கிய சார் ஐ லவ் யூ படத்தில் கதாநாயகியை தேடிக் கொண்டிருந்த போது பூர்ணிமா ரூபிணியை பற்றி பாக்கியராஜிடம் சொல்லியிருக்கிறார்.
அப்போது ரூபிணிக்கு 14 அல்லது 15 வயது தான் இருக்கும். அந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்தாலும் படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது .அதன் பிறகு ஹிந்தியிலும் பட வாய்ப்பு வர அங்கும் நடிக்க போய்விட்டார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுது ரஜினியுடன் ஒரு ஹிந்தி படத்திலும் ரூபிணி நடித்திருக்கிறார். அதன் பிறகு தமிழில் கூலிக்காரன், தீர்த்தகரையினிலே. மனிதன் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கூலிக்காரன் படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்க அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதனைத் தாண்டி பெரிய ஹிட் ஆன படம் மனிதன். இந்த படத்தில் நடிக்கும் பொழுது ரூபிணிக்கு 16 வயது .ஏவிஎம் வந்து இவரிடம் கேட்க நடிக்க ஓகே சொல்லிவிட்டார். படப்பிடிப்பில் ரஜினி ரூபிணியுடன் மராத்தியில்தான் பேசுவார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது ரஜினி ஒரு பெரிய ஸ்டார் என்பது ரூபிணிக்கு தெரியவே தெரியாது. அதனால் ரஜினி முன்பே கால் மேல் கால் போட்டு செட்டில் மிகவும் அசால்ட் ஆக இருப்பாராம் ரூபிணி .அந்த படத்தில் காள காள பாடல் ஒரு பெரிய ஹிட் .அந்த பாடலை எடுக்கும் பொழுது ரஜினியே ரூபிணியை கூப்பிட்டு நீ அடிப்படையில் ஒரு பெரிய டான்சர்.
எனக்கு டான்ஸ் வராது. சும்மா கை கால்களை மட்டும் தான் ஆட்டுவேன். நீ எப்படியாவது மேட்ச் பண்ணி நடித்துக்கொள் எனக் கூறினாராம். அதன் பிறகு ரஜினி ஆடும் பொழுது ரூபினிக்கு பயங்கர சிரிப்பு வந்து விட்டதாம். உடனே யூனிட் ஆட்கள் அனைவரும் ரூபிணியை கண்டிக்க ஆரம்பித்து விட்டார்களாம். ஆனாலும் ரஜினி அந்த பொண்ணுக்கு தெரியாது விடுங்க என சொல்லி அனுப்பிவிட்டாராம். அதன் பிறகு ரூபிணி ஹிந்தியில் நடிக்க போக படமோ மிகப் பெரிய அளவில் ஹிட். படத்தின் வெற்றி விழாவிற்கு வந்தபோதுதான் ரஜினிக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து ரூபிணி அதிசயித்து போய்விட்டாராம் .இப்படிப்பட்ட ஒரு நபரை நாம் கிண்டல் பண்ணி விட்டோமே என மிகவும் வெட்கப்பட்டாராம்.