இனிமே இப்படி செஞ்சா கேஸ் போடுவேன்!.. சாய்பல்லவியையே டென்ஷன் பண்ணிட்டாங்களே!..

By :  Murugan
Update: 2024-12-12 03:14 GMT

சாய் pallavi

Sai pallavi: மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் அதிக அளவில் ரீச் ஆன நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். இந்த படத்தில் தமிழ் பேசும் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நிவின் பாலியை விடமும் சாய் பல்லவி அதிகம் பிரபலமானார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் தனது கதாபாத்திரம் கணமாக இருந்தால் மட்டுமே நடிப்பார் சாய்பல்லவி. நல்ல கதை, அதில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதாபாத்திரம் என்றால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.


அதனால், அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதோடு சாய் பல்லவியும் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறது. இவரின் சொந்த ஊர் கோத்தகிரி. கோவையில் பிறந்து வளர்ந்த இவர் டாக்டர் படிப்பு படித்தவர். தாய்மொழி தமிழ் என்றாலும் மலையாளமும், தெலுங்கும் கற்றுக்கொண்டார். நன்றாக நடனமும் ஆடுவார்.

எனவே, பிரேமம் படத்திற்கு பின் தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் மனைவியான இந்து ரெபகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடிப்பை பாராட்டை பெற்றிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சாய்பல்லவிக்கு ஹிந்தியிலும் வாய்ப்பு வந்திருக்கிறது. பாலிவுட்டில் இராமாயணம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை என சாய்பல்லவி முடிவெடுத்திருப்பதாகவும், படப்பிடிப்பு தளத்தில் சமைக்கப்படும் உணவு மற்றும் ஹோட்டல் உணவுகளை சாப்பிட வேண்டாம் என்பதற்காக படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்கு செல்லும்போதும் கையோடு சமையல்காரரை அவர் அழைத்து செல்வதாகவும் செய்திகள் வெளியானது.


ஆனால், சாய்பல்லவி இதை மறுத்திருக்கிறார். இதுவரை என்னை பற்றி வெளியாகும் பொய்யான, ஆதாரமற்ற செய்திகள் வெளியாகும்போதெல்லாம் நான் அமைதியாகவே இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க மாட்டேன். இனிமேல் என்னை பற்றி இப்படி பொய் செய்திகள் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்’ என எக்ஸ் தளத்தில் பொங்கியிருக்கிறார்.

கூல் பொண்ண இப்படி டென்ஷன் பண்ணிட்டீங்களேப்பா!..


Tags:    

Similar News