ஜனநாயகன் படத்தில் இணையும் பிரபலம்!.. 10 வருஷத்துக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடியா?..

By :  Ramya
Update:2025-02-08 18:39 IST

Actor Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கடைசி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து தனது கட்சி வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார். அதே சமயம் தன்னுடைய கடைசி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்திலும்  நடித்து வருகின்றார்.

விஜய்யின் அரசியல் பயணம் : கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிகழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தனது அரசியல் வேலைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். கட்சி தொடங்கிய உடனே கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் செய்து முடித்திருந்தார்.


பொதுவாக நடிகர் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருவது வழக்கம் தான். ஆனால் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. வீட்டிலிருந்தே அரசியல் செய்கின்றார், பனையூர் பண்ணையார் என தொடர்ந்து அவரை சமூக வலைதள பக்கங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நடிகர் விஜய் தொடர்ந்து தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார்.

தளபதியின் கடைசி படம்: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 அதாவது ஜனநாயகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குகின்றார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, நரேன், கௌதம் மேனன், பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை பயனுூரில் மிகப்பெரிய செட்டு போட்டு எடுத்து வருகிறார்கள். தற்போது இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

விஜயுடன் ஸ்ருதிஹாசன்: ஜனநாயகன் திரைப்படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது புதிதாக நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது, இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கதாபாத்திரம் என்பது தெரியவில்லை.


ஆனால் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. 10 வருடத்திற்கு முன்பு சிம்புதேவன் இயக்கத்தில் உருவான புலி என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜயுடன் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News