அஜித் படத்தில் பராசக்தி பட நடிகை!.. லப்பர் பந்து நடிகையும் இருக்கிறாராம்!..

AK64: அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். விடாமுயற்சி படம் ரசிகர்களை திருப்திபடுத்தாத நிலையில் குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இப்படம் கேங்ஸ்டர் கதை என்பதால் முழுக்க முழுக்க ஹீரோயிசம் கொண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த படத்தை முடித்தவுடன் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார். அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இப்பத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்வரை நடைபெறவுள்ளது. குட் பேட் அக்லி போல் கேங்ஸ்டர் படமாக இல்லாமல் இது வேறு மாதிரியான படம் என ஆதிக் சொல்லிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீலீலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் லப்பர் பந்து படத்தில் நடித்த சுவாசிகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். அஜித் இனிமேல் தன்னுடைய வயதை ஒட்டிய நடிகைகளுடன் மட்டுமே ஜோடி போடுவார் என சொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீலீலா எப்படி அஜித்துக்கு பொருத்தமாக இருப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.