மருதமலைக்கு திடீர் விசிட்!.. திரிஷா ராசியாவது சூர்யாவுக்கு கைகொடுக்குமா?.. வைரல் வீடியோ!..

நடிகை திரிஷா திடீரென்று மருதமலை கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

By :  Ramya
Update: 2024-12-14 15:16 GMT

trisha temple

நடிகை திரிஷா: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். பின்னர் புது நடிகைகளின் வரவு காரணமாக மார்க்கெட் இழந்து பீல்ட் அவுட்டாகி இருந்த திரிஷாவை மணிரத்னம் மீண்டும் பிரபலமாகிவிட்டார்.


தான் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை கொடுத்து அனைவரையும் திரிஷா பக்கம் திருப்பி விட்டார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவுக்கு எல்லாமே டாப் கியர் தான். தொடர்ந்து மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிக்க தொடங்கி விட்டார்.

நடிகர் விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இது இல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்திலும், சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் டாப் நடிகர்களுடன் ஜோடி போடத் தொடங்கிவிட்டார் திரிஷா. தமிழை தாண்டி தெலுங்கிலும் ஏகப்பட்ட திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் நடிகை திரிஷா தற்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகின்றார். படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தில் நடிகை திரிஷா லாயர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் நடிகை திரிஷா மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் பழக்கம் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதால் அவரின் பழக்கம் திரிஷாவுக்கு ஒட்டிக் கொண்டது போல.

சூர்யா தான் சமீப நாட்களாக அடுத்த படமாவது ஹிட்டாக இருக்க வேண்டும் என்று கோயில் கோயிலாக சுற்றி வருகின்றார். தற்போது நடிகை திரிஷாவும் அவரை போலவே கோயிலுக்கு செல்ல தொடங்கி விட்டார். திரிஷாவின் ராசியாவது சூர்யாவுக்கு வொர்க் அவுட்டாக வேண்டும். அடுத்த படம் நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags:    

Similar News