சூப்பர் ஸ்டார் காலில் விழுந்த தனுஷ்.. குபேரா கொடுத்த பரிசு! கடைசில இப்படி ஆகிப்போச்சே
dhanush
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியிருந்தார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கன்னடம் மலையாளம் ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் டப் செய்யப்பட்டு வெளியானது. இரண்டாவது முறையாக தனுஷ் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கு முன் வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குனர் சேகர் கம்முலா பல விருதுகளை பெற்றவர். அவருடைய இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என தெரிந்ததும் தமிழ் சினிமாவை தவிர தெலுங்கு சினிமாவில் தான் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் சேகர் கம்முலாவின் படைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரியும்.
அதனால் அவருடைய இயக்கத்தில் தனுஷ் வேறு மாதிரியான ஒரு பெர்பாமன்ஸை கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்தனர். அந்த அளவுக்கு படத்திலும் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது. பிச்சைக்காரன் வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். படம் வெளியானதுமே கண்டிப்பாக தனுஷுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என அனைவருமே கூறினார்கள்.
படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா லீடு ரோலில் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி பணக்காரனுக்கும் பிச்சைக்காரனுக்கும் இடையே நடக்கும் கதைதான் இந்த படம். தன்னுடைய சுய லாபத்திற்காக தனுஷை நாகர்ஜுனா பயன்படுத்திக் கொள்வது மாதிரியான படமாக தான் இது வெளிவந்திருக்கிறது.
படம் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் தமிழை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் குபேரா படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். நேற்று இந்த படத்தின் சக்சஸ் மீட் டோலிவுட்டில் நடைபெற்று இருக்கிறது. அந்த சக்சஸ் மீட்டில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு தனுஷை வாழ்த்தினார். சிரஞ்சீவி வந்ததுமே அவருடைய காலில் விழுந்து வணங்கினார் தனுஷ்.
chiru
அதுமட்டுமல்ல நாகர்ஜுனா தனுஷை பற்றி பேசும்பொழுது ‘அவரைப் பற்றி என்ன பேசுவது என தெரியவில்லை. ஏற்கனவே நான்கு தேசிய விருதுக்கு சொந்தக்காரர். நான் ஏதாவது பேசி அது மிகவும் குறைவாக இருந்தால் என்ன பண்ணுவது’ என கூறினார் நாகர்ஜுனா. மேலும் சிரஞ்சீவியை பார்த்து ‘சிரஞ்சீவிகாருபடப்பிடிப்பில் தனுஷை என்னால் அடையாளம் கண்டு கொள்ளவே முடியவில்லை. இது தனுஷா அல்லது அந்த கேரக்டரா?
அந்த அளவுக்கு கேரக்டராகவே மாறி இருந்தார். எல்லாவற்றையும் left handல் ஹேண்டில் செய்து வருகிறார் தனுஷ். அவுட் ஸ்டாண்டிங் பெர்ஃபார்மர் தனுஷ்’ என தனுஷை பற்றி சொல்ல சொல்ல சிரஞ்சீவி மிகவும் மெய் சிலிர்த்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் தமிழ் சினிமா செய்ய வேண்டியதை தெலுங்கு சினிமா செய்து கொண்டிருக்கிறது. தனுஷின் நடிப்பு திறமை என தமிழ் சினிமா கொண்டாடப்பட வேண்டிய நடிகர் தனுஷ் என கமெண்ட்டில் கூறி வருகிறார்கள்.