டி ராஜேந்தரே பார்த்து பொறாமை படணும்!.. ஆல் ரவுண்டராக கலக்கும் தனுஷ்.. எவ்ளோ டெடிகேஷன்..
நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் படு பிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். ஒரு பக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இயக்கத்திலும் முழு கவனத்தை செலுத்தி வருகின்றார்.
பவர் பாண்டி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக மாறிய தனுஷ் அதைத் தொடர்ந்து 7 வருடத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் தொடர்ந்து இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இந்த திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
தவான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிக்சர் நேற்று வெளியானது. இதில் நடிகர் ராஜ்கிரனுடன் தனுஷ் இருந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வந்தது. சினிமாவில் தொடர்ந்து பிஸியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் தனுஷ் ஆல் ரவுண்டராக இருந்து வருகின்றார். ஹீரோவாக அறிமுகமாகி பாடகராகி, எழுத்தாளராகி, தயாரிப்பாளராகி தற்போது இயக்குனராகவும் இருந்து வருகின்றார்.
பெயருக்காக இல்லாமல் அனைத்து துறைகளிலும் தன்னை சிறந்த ஒரு நபராக காட்டி இருக்கின்றார் நடிகர் தனுஷ். தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் இவர் கால் பதிக்கும் இடமெல்லாம் வெற்றியாக குவிந்து வருகின்றது. தமிழ் சினிமாவிலேயே டி ராஜேந்தர் அவருக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர் நடிகர் தனுஷ் மட்டும் தான். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதில் முழு ஈடுபாடுடன் செய்யக்கூடிய ஒரு நடிகராக இருந்து வருகின்றார்.
சமீபத்தில் இட்லி கடை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது டூப் போடாமல் சில காட்சிகளை எடுத்ததால் தனுசுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் சென்னை வந்து இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்த தனுஷ் மீண்டும் குபேரா திரைப்படத்தில் நடிப்பதற்கு சென்று இருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் நிலையில் அப்படத்தில் ஒரு பாடலையும் நடிகர் தனுஷ் பாடி கொடுத்திருக்கின்றாராம். தனக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலும் தனது படம் என்று வரும்போது அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு முழு ஈடுபாட்டுடன் அந்த வேலையை செய்து கொடுத்திருக்கின்றாராம் நடிகர் தனுஷ். இவரை அடுத்த டி ராஜேந்தர் என்றே நாம் சொல்லலாம் என சினிமா விமர்சனங்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.