மூணு பெக்கை விட அந்த போதை தான் அதிகமா இருக்கு.. ரஜினி சொன்னது எதை தெரியுமா?
rajini
தமிழ் சினிமாவில் ஒரு தலை சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ரஜினி இந்திய அளவில் மிகவும் பெருமை மிக்க நடிகராகவும் கருதப்படுகிறார்.
எங்கிருந்தோ வந்து இன்று இந்த தமிழ்நாட்டையே தமிழ்நாட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார். அரசியலுக்கு வர மாட்டாரா என எத்தனையோ ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் டாடா காட்டி சென்று விட்டார்.
சினிமாவே போதும். சினிமாவில் கிடைக்கும் புகழே போதும் என அரசியலுக்குள் வருவதிலிருந்து பின் வாங்கினார் ரஜினி. 73 வயதை அடைந்த ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
இன்று அவருடைய படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றன. எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் ரஜினிக்கு இணையாக இன்னும் அந்த அளவு புகழை யாரும் அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடிகராக மட்டுமல்லாமல் அடுத்த இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் ரஜினி.
அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் அவ்வப்போது கூறி வருகிறார். இந்த நிலையில் கமலின் ஒரு படத்தை பற்றி ரஜினி கூறிய சம்பவத்தை இயக்குனர் பி வாசு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். ஆரம்ப காலங்களில் புகை, மது இல்லாமல் ரஜினி இருக்கவே மாட்டார். இது அனைவருக்குமே தெரியும்
ஆனால் இப்போதுதான் அதை எல்லாம் விட்டுவிட்டு முழுவதுமாக ஆன்மீகத்தில் இறங்கிவிட்டார். அன்றைய காலகட்டத்தில் கமல் நடித்த நாயகன் திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியது. அந்த படத்தை பார்த்துவிட்டு பி வாசு ரஜினியிடம் நாயகன் திரைப்படத்தை பார்த்தேன். வாயடைத்து நின்று விட்டேன். இன்னும் நீங்கள் அந்த மாதிரி ஒரு படம் பண்ணவில்லை என்று கூறினேன்.
அதற்கு ரஜினி நான் ஒன்னு சொல்லட்டுமா? நானும் அந்த படத்தை பார்த்தேன். பார்த்துவிட்டு வந்து முதல் பெக் ஊற்றினேன். ஏறலை. இரண்டாவது பெக் ஊற்றினேன். ஏறலை. மூன்றாவது பெக் ஊற்றினேன். ஏறலை. உடனே கமலுக்கு போன் செய்தேன். கமல் மூணு பெக் அடிச்சாலும் நாயகன் போதையாக தான் இருக்கிறது என்று கூறினேன் என ரஜினி சொன்னதாக வாசு அந்த பேட்டியில் கூறினார் .அந்த அளவுக்கு நாயகன் திரைப்படம் ரஜினியையும் பெரிய அளவில் பாதித்திருக்கிறது.