லேடிஸ் கிடைச்சா நல்லா பேசுவாரு.. புதுதகவலா இருக்கே? அஜித் பற்றி இயக்குனர் சொன்ன தகவல்
Actor Ajith:இன்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார் அஜித். அவருடைய பேஷனான கார் ரேஸில் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறார். சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதையும் தன்னுடைய வெற்றியின் மூலம் நிரூபித்து வருகிறார். ஒரு பக்கம் சினிமாவிலும் தனக்கென ஒரு தனி ராஜ்ஜியம் நடத்திவருகிறார். இன்னொரு பக்கம் அவருடைய பேஷனை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் முழு உத்வேகமாக இருப்பது அவருடைய மனைவி ஷாலினிதான். அதை பல மேடைகளில் அஜித் சொல்லிக் கொண்டுதான் வருகிறார். ஏனெனில் பெரும்பாலும் அஜித் படப்பிடிப்பு என்றால் வெளி நாடுகளில் தான் இருப்பார். இப்போது ரேஸில் ஈடுபட்டு வருவதால் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் தான் சுற்றி வருகிறார். இப்படி இருக்க அவருடைய குடும்பத்தை பார்த்து வருவது ஷாலினிதான்.
இப்போதுள்ள காலகட்டத்தில் எந்த பெண்ணும் ஷாலினி மாதிரி இருப்பார்களா என்று தெரியாது. அதனால் அஜித்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பவர் ஷாலினி. இந்த நிலையில் அஜித்தை பற்றி பிரபல சினிமா இயக்குனரும் தேவயாணியின் கணவருமான ராஜகுமாரன் ஒரு பேட்டியில் சில தகவல்களை கூறியிருக்கிறார்.
அஜித் பொதுவாக யாரிடமும் பேச மாட்டாராமே என்று தொகுப்பாளர் ராஜகுமாரனிடம் கேட்க ‘அப்படிலாம் இல்லை. நல்ல பெண்கள் கிடைச்சா பேசிக்கிட்டே இருப்பார்’ என கூறினார் ராஜகுமாரன். மேலும் அஜித்தை வைத்து நீ வருவாய் என படத்தை எடுத்தார் ராஜகுமாரன். அதில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் அஜித். அதற்கு முன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் ராஜகுமாரன் உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம்.
rajakumaran
அந்த சமயத்தில்தான் அஜித்திடம் பழகும் வாய்ப்பு ராஜகுமாரனுக்கு கிடைத்திருக்கிறது. அப்போது நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என அஜித் ராஜகுமாரனுக்கு சத்தியம் செய்து கொடுத்தாராம். அதனால்தான் நீ வருவாய் என படத்தில் அஜித் நடித்தார் என்றும் அவர் சொன்னதை கண்டிப்பாக காப்பாற்றுவார் என்றும் ராஜகுமாரன் அந்த பேட்டியில் கூறினார்.