மகளின் 17 வது பிறந்தநாள்!.. வெளிநாட்டில் சிம்பிளா கொண்டாடிய அஜித்.. வைரல் புகைப்படம்!..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரது திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதும் திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் அஜித்தின் திரைப்படம் வெளிவராதா என்று ஏங்கி போய் இருக்கிறார்கள். நடிகர் அஜித் தனது 62 ஆவது படமாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மகிழ்த்திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தை இயக்கி வருகின்றார்கள். ஒரு வழியாக சமீபத்தில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது. சரி இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகி விடும் என்று நம்பி இருந்த நிலையில் திடீரென்று லைக்கா நிறுவனம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவில்லை என்கின்ற மிகப்பெரிய குண்டை தூக்கி ரசிகர்கள் தலையில் போட்டு விட்டார்கள்.
இதனால் லைக்கா நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அந்த திரைப்படமும் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றது.
இந்த திரைப்படம் முதலில் பொங்கலுக்கு வெளிவர இருந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வருவதாக அறிவித்ததால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அதன்படி இந்த திரைப்படம் மே மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
நடிகர் அஜித் பேக் டு பேக் இரண்டு திரைப்படங்களை முடித்த கையோடு ஐரோப்பியாவில் நடைபெறும் ஜி5 கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கின்றார். இதற்காக தனது உடல் எடையை பயங்கரமாக குறைத்திருக்கும் நடிகர் அஜித் கார் ரேசிங்கை முடித்துவிட்டு தான் மீண்டும் அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
சினிமா எந்த அளவுக்கு நடிகர் அஜித்துக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர். அதேபோல் குடும்பத்தினருடனும் அதிக நேரம் செலவிடும் அஜித் ஒரு திரைப்படத்தை முடித்தவுடன் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று விடுவார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கின்ற மகளும் ஆத்விக் என்கின்ற மகனும் இருக்கின்றார்கள். தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இருக்கும் நடிகர் அஜித் தனது மனைவி, மச்சான், மச்சினிச்சி, குழந்தைகள் அனைவருடனும் விடுமுறையை கழித்து வருகின்றார். மேலும் தனது மகளின் 17-வது பிறந்தநாளையும் வெளிநாட்டில் மிக எளிமையாக கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அஜித்தின் ரசிகர்கள் பலரும் அவரின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.