ரஜினியின் தகுதி பத்தி பேசிய நபர்!.. சரியான பதிலடி கொடுத்த அஜித்.. தீவிர ரசிகரா இருப்பாரோ!..
Actor Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை எடுத்து முடிப்பதற்கு கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது.
விடாமுயற்சி திரைப்படம்: மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கின்றார். மேலும் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படம் கடந்த 6ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று கூறி வருகிறார்கள். இருந்தாலும் இரண்டு வருடத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை திரையில் காண்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்து வருகிறார்கள். ஒரு மாஸ் ஹீரோ என்கின்ற தன்னுடைய இமேஜை மறந்து இந்த திரைப்படத்தில் ஒரு சாதாரண நடிகராக நடித்திருக்கின்றார்.
இது அஜித் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனி புரோமோஷன் நிகழ்ச்சியிலேயே நாம் எல்லா திரைப்படங்களிலும் பார்க்கும் அஜித்தை இந்த படத்தில் பார்க்க முடியாது. இதில் மாஸான பாடல்கள், பஞ்சு வசனங்கள் என எதுவுமே இல்லை என்று கூறியிருந்தார்.
ரஜினியின் ரசிகர் அஜித்: அஜித் திரைப்படத்திற்கு தொடர்ந்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதிலும் ரஜினி ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படத்தை சப்போர்ட் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் அஜித் ஒரு திரைப்படத்தில் ரஜினி குறித்து பேசிய வசனங்கள் தான். நடிகர் அஜித் வான்மதி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் போது ஒரு காட்சியில் ரஜினி குறித்து பெருமையாக பேசியிருப்பார்.
அந்த படத்தில் ரஜினியின் போஸ்டரை ஒருவர் கிழிப்பார். ஆனால் அஜித் தான் அந்த போஸ்டரை ஒட்டி இருப்பார். தான் ஒட்டிய போஸ்டரை ஒருவர் கிழிக்கிறார் என்று தெரிந்தவுடன் அங்கு சென்று ஏன் என் தலைவரின் போஸ்டரை கிழிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பார். அதற்கு என்ன உங்க தலைவரா? உங்க ஆளுக்கு தலைவராக என்ன தகுதி இருக்கிறது என கேட்க.. அஜித் இதே உங்க தலைவரோட போஸ்டரை நான் கிழித்திருந்தால் நீங்க என்ன பண்ணி இருப்பிங்க என்று கேட்பார்.
அதற்கு அந்த நபர் உன்னுடன் சண்டை போட்டு இருப்போம். வெட்டு குத்து நடந்து இருக்கும் என்று கூற, அதற்கு அஜித் உங்கள் தலைவர் போஸ்டர் கிழிச்சா நீங்கள் சண்டைக்கு வருவீங்க. ஆனால் எங்க தலைவர் போஸ்டரை கிழித்ததற்கு நாங்க அமைதியா பேசிக்கிட்டு இருக்கோம். வன்முறை கூடாது என அஹிம்சையையும் சத்தியத்தையும் எங்க தலைவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இதைவிட அவர் தலைவராக வேறு என்ன தகுதி வேண்டும் என்று அஜித் கேட்பார். அந்த படத்தில் அஜித்தின் இந்த வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினியின் தீவிர ரசிகராக அஜித் இருப்பார். அதனால்தான் படத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.