அஜீத் கடைசியா கொடுத்த பேட்டியைப் பாருங்க... அதுல கூட தல மாஸ காட்டிருக்காரே..!

By :  sankaran
Update: 2024-09-29 16:30 GMT

அல்டிமேட் ஸ்டார் அஜீத் தன்னோட சினிமா, பைக்ரேஸ் என இரண்டு விஷயங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 90களில் இருக்கும்போது இருந்த அஜீத் இப்போ இல்லையே... ரொம்ப மாறிட்டாரே என நினைக்கத் தோன்றுகிறது. இதற்கு பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

அஜீத் கூட ரெட்டை ஜடை வயசு படத்தில் ஜோடியாக நடித்தவர் மந்த்ரா. அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ஆச்சரியப்பட வைத்தது. அதுல அஜீத்துடன் நடிச்ச அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புல செட்ல என்னோட சீன் இல்லாத நேரம் அஜீத்தையேப் பார்த்துக்கிட்டு இருப்பாராம். அவ்ளோ கியூட்டா இருப்பாராம் அஜீத்.

அப்புறம் இவரு வேற வேற மொழிகளில் நடிச்சி கல்யாணம் ஆகி செட்டில் ஆகிட்டாரு. இப்போ அஜீத் இன்னும் அதே அழகோடு நடிச்சிக்கிட்டு இருக்காரு. நான் தான் ஸ்கிப் பண்ணிட்டேன்னு தன்னோட ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். ஆரம்பகால கட்டத்துல இருந்த அஜீத் ஏன் இப்போ இப்படி மாறிட்டாருன்னு ஒரு கேள்வி இருக்கு.

அதாவது அஜீத் கடைசியா 2012ல ஒரு மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார். அதுதான் அவரோட கடைசி பேட்டி. அதுல கூட ஒரு கேள்வி கேட்டாங்க. நடிகர்கள் அரசியலுக்கு வர்றாங்க. அதைப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்குறாங்க. அதுக்கு அஜீத் சொன்ன பதில் இதுதான்.


ஒரு கிச்சனுக்குள்ள ஒருத்தர் அல்லது ரெண்டு பேர் சமைச்சா நல்லாருக்கும். 10 பேர் சமைச்சா அந்தக் கிச்சன் கிச்சனா இருக்காது. அந்த உணவும் சரியா இருக்காது. அப்படிப் பார்த்தா தமிழ்நாட்டுல அவ்ளோ கட்சிகள் இருக்குது. அந்தக் கட்சிகள்லயே வந்து அவ்ளோ குளறுபடி இருக்குது. நான் வேற வந்து புதுசா கட்சி ஆரம்பிக்கணுமா? யார் நல்லவிதமா ஆட்சி செய்கிறார்கள்?

யார் நல்ல விதமாக மக்களுக்குத் தருகிறார்களோ அவங்களை ஆதரிச்சிட்டுப் போயிடறேன். நான் எப்பவுமே என்னோட உச்சபட்ச அரசியல் ஆசை வந்து அன்னைக்கு ஓட்டுப்போடும்போது கியூல நிக்கிறேன் பாருங்க. அதுதான். வாக்களிக்கிறது. அந்த வேலையைத் தான் நான் செஞ்சிக்கிட்டு இருப்பேன்னு போல்டா சொன்னவரு தான் அஜீத். அரசியல் எனக்கு சரிப்பட்டு வராதுங்கறதையும் சொல்லாம சொல்லிடறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News