முருகதாஸுடன் அஜித்!.. சுரேஷ் சந்திரா பகிர்ந்த போட்டோ!.. என்னமோ நடக்குது!..

by Murugan |   ( Updated:2025-08-03 12:47:56  )
ajith murugadoss
X

அஜித்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய திரைப்படம் தீனா. 2001ம் வருடம் வெளியான இப்படம் மூலம்தான் முருகதாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் தீனா ஹிட் அடித்தும் அதன்பின் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்கவே இல்லை. பொதுவாக ஒரு இயக்குனர் படத்தில் நடித்து அப்படம் வெற்றி பெற்றால் அதே இயக்குனருக்கு அஜித் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்.

சிறுத்தை சிவாவுடன் அஜித் முதல் முறையாக இணைந்த வீர்ம் திரைப்படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து சிவாவின் இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் நடித்தார். தற்போதுவரை அஜித்தின் குட்புக்கில் சிவா இருக்கிறார். அதேபோல் ஹெ.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபின் அவரை பிடித்துபோகவே தொடர்ந்து வலிமை, துணிவு ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், முருகதாஸ் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நடிக்கவில்லை. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. கஜினி பட கதையே முருகதாஸ் முதலில் அஜித்திடம்தான் சொன்னார். அஜித் முருகதாஸை சில மாதங்கள் காத்திருக்க சொன்னார். ஆனால் அந்த கதையை சூர்யாவிடம் சொல்லி படமாக எடுத்தார் முருகதாஸ். இந்த கோபத்தில்தான் கடந்த 24 வருடங்களாக முருகதாஸை அஜித் புறக்கணித்தார் என சொல்லப்படுகிறது.


இந்நிலையில் அஜித்துடன் முருகதாஸ் இருக்கும் புகைப்படத்தை சுரேஷ் சந்திரா பகிர்ந்து நண்பர்கள் தின வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார். இந்த புகைப்படத்தில் சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்ச்ந்திரன், அனிருத் உள்ளிட்ட சிலரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முருகதாஸும், அஜித்தும் மீண்டும் இணைய வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.


Next Story