ரஜினி கேட்ட கேள்வி! பாடுறதையே நிறுத்திய சுருதிஹாசன்.. செட்டில் நடந்த சம்பவம்

coolie
கூலி படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி அந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. சமீபத்தில் தான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா என்றாலே முதலில் அவருடைய பேச்சை கேட்பதற்காகவே அனைவரும் ஆர்வமாக காத்திருப்பார்கள்.
அப்படித்தான் கூலி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் அவருடைய பேச்சு சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக லோகேஷை கிண்டலாக வறுத்து எடுத்தார் ரஜினி .அரங்கமே சிரிப்பலையாக மாறியது. இந்த படத்தில் சுருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜுக்கு மகளாக நடிக்கிறார். ஆரம்பத்தில் ரஜினியின் மகளாக நடிக்கிறாரோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.
சமீபத்தில் தான் அந்த சந்தேகத்தை படக்குழு தீர்த்து வைத்திருக்கிறது .இந்த நிலையில் ஸ்ருதிஹாசனும் படத்தைப் பற்றியும் கூலி படத்தில் தான் நடித்ததை பற்றியும் பல அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் சுருதிஹாசன் அடிப்படையில் ஒரு பாடகி என்பதால் கூலி படத்தின் செட்டில் எப்பொழுதுமே பாடிக் கொண்டே இருப்பாராம். ஒரு சமயம் ரஜினி உள்ளே வந்ததும் ஸ்ருதி பாடுவதை கேட்டு ‘எப்பொழுதுமே நீ பாடிக்கிட்டு தான் இருப்பீயா’ என கேட்டிருக்கிறார்.
அதிலிருந்து ஸ்ருதி பாடுவதை நிறுத்தி விட்டாராம். சிறிது நாட்கள் கழித்து நீ ஏன் பாடவே இல்லை என கேட்டாராம் ரஜினி. அதன் பிறகு டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிக்காக சுருதி பாடிய பாடல் தான் ‘சூப்பர் ஸ்டார்னு யாருன்னு கேட்டா’ என்ற பாடல். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.