இதுதான் அட்டகாசமான ஜோடி! சாய்பல்லவி கேரக்டரை வெளியிட்ட அமரன் படக்குழு

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தின் ஒரு அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் தான் அமரன். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு ராணுவ வீரராக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

படம் தீபாவளி ரிலீஸாக அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் கெரியரில் அமரன் திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதுவரை ஒரு காமெடி நடிகராக, பல படங்களில் ஹீயுமர் செய்தே சிவகார்த்திகேயனை நாம் பார்த்து ரசித்திருப்போம்.

ஆனால் இந்தப் படத்தில் ஒரு ராணுவ வீரர் எனும் போது படத்தில் அவர் கேரக்டர் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் ராணுவ உடையில் இருக்கும் மாதிரியான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

சமீபகாலமாக சிவகார்த்திகேயன் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவும் மக்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார். குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை அடைந்த நடிகர் யாரென்றால் அது சிவகார்த்திகேயன் தான். எந்த கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து மக்களை உற்சாகப்படுத்துவேன் என சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நிருபித்து வருகிறார்.

அமரன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. இந்த நிலையில் இன்று சாய்பல்லவியின் கேரக்டை படக்குழு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

மேஜர் முகுந்தின் மனைவியான ரெபெக்கா வர்கீஸாக சாய்பல்லவி அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அவரின் அறிமுகத்தை கொடுப்பதற்கு முன் மேஜர் முகுந்தின் உண்மையான மனைவி 2015 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்ற வீடியோவை காட்டிவிட்டு அவரது பேச்சையும் பதிவு செய்து விட்டு அதிலிருந்து சாய்பல்லவியை காட்டியிருக்கிறார்கள்.இது ஒரு ராணுவ வீரரின் கதையாக இருந்தாலும் இதற்குள் ஒரு அழகான காதல் கதையும் இருப்பது போல சாய்பல்லவியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.




rohini
rohini  
Related Articles
Next Story
Share it