20 வருடங்களாக சம்பளமே வாங்காமல் நடிக்கும் அமீர்கான்!.. இவர ஃபாலோ பண்ணுங்கப்பா!..
Amirkhan: பாலிவுட்டின் முக்கிய நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவரை பாலிவுட் கமல்ஹாசன் என சொல்வார்கள். அந்த அளவுக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடிப்பார். இவருக்கு உலக முழுவதும் ரசிகர்கள் உண்டு. 80,90களில் இவரின் பல திரைப்படங்கள் தமிழ்நாட்டிலும் வெளியாகி வந்தது.
இப்போது போல மொழி மாற்றம் எல்லாம் அப்போது இல்லை. நேரிடையாக ஹிந்தியிலேயே அவரின் படங்கள் வெளியாகும்.. ஹிந்தி படங்களில் வரும் பாடல்களுக்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்த்தார்கள். அமீர்கானின் பல திரைப்படங்கள் தமிழகத்திலும் நன்றாகவே ஓடியிருக்கிறது.
லகான், ரங்தே பசந்தி, தூம், 3 இடியட்ஸ், பீ.கே, ரங்கீலா, கஜினி, இஸ்க் உள்ளிடட் பல படங்கள் ரசிகர்களிடம் பிரபலம். இவரின் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 2 ஆயிரம் கோடி வசூல் செய்தாக ஒரு செய்தி உண்டு. இந்திய சினிமாவில் அதிக வசூலை பெற்றது இந்த படம்தான். சீனாவிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது.
அமீர்கானுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் மீது அதிக மரியாதை உண்டு. சூர்யா நடித்த கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கான் நடித்த ரோலில்தான் நண்பன் படத்தில் விஜய் நடித்தார். கமல்ஹாசனை போல பல பரிசோதனை முயற்சிகளையும் அமீர்கான் செய்வார். லைக் ஸ்டார்ஸ் ஆன் எர்த் என்கிற படத்தை இயக்கியும் இருந்தார்.
குழந்தைகளிடம் இருக்கும் ஸ்பெஷல் திறமைகளை பெற்றோர் ஊக்குவிக்கும் என்கிற கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது சம்பளம் பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லி பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் அமீர்கான்.
நான் கடந்த 20 வருடங்களாக நடிப்பதற்கு சம்பளமே வாங்குவதில்லை. படம் வெளியாகி லாபம் ஈட்டிய பின் லாபத்தில் பங்கு பெற்றுக்கொள்வேன். அதற்கு முன்பு ஒரு ரூபாய் கூட முன் பணமாக நான் வாங்கியது இல்லை’ என சொல்லியிருக்கிறார். கோலிவுட்டில் பெரிய நடிகர்களுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதில், 70 சதவீத பணத்தை ஷூட்டிங் துவங்கும் முன்பே வாங்கிக்கொள்வார்கள். அதோடு, படம் ஓடவில்லை என்றால் நஷ்டம் தயாரிப்பாளருக்கு மட்டுமே. ஹீரோக்கள் வேறு தயாரிப்பாளரிடம் போய்விடுவார்கள். இவர்களோடு ஒப்பிட்டால் லாபத்தில் பங்கு என்கிற அமீர்கானின் முடிவை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.