அஜித் பட பாட்ட சுட்டு ‘மோனிகா’ பண்ணாரா அனிருத்?!.. வீடியோ போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்!...

by MURUGAN |
aniruth
X

Coolie: சினிமாவில் காப்பி என்பது காலம் காலமாக இருக்கிறது. பெரும்பாலும் மற்ற படங்களிலிருந்து கதைகளை காப்பி அடிப்பார்கள். இங்கே அடித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் ஹாலிவுட், கொரியன், ஜப்பான், சீன மொழி பக்கம் போய்விடுவார்கள். அப்படித்தான் பல வருடங்களாக பல இயக்குனர்கள் காலத்தை ஓட்டினார்கள். அந்த படத்தின் கதையை திருடி அதில் சில மாற்றங்களை செய்து தமிழுக்கு ஏற்றார் போல மாற்றிவிடுவார்கள்.

அதேபோல் ஹாலிவுட் நடிகர்களின் நடிப்பை கூட காப்பி அடிப்பார்கள். God Father படத்தில் மார்லன் பிராண்டே செய்த சில மேனரிசங்களை நாயகன் படத்தில் கமல் செய்திருப்பார். இப்போதெல்லாம் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் இதையெல்லாம் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதோடு, சினிமா மீது ஆர்வம் கொண்ட பலரும் பல மொழி படங்களையும் பார்த்துவிடுகிறார்கள்.

கதை, நடிப்பை காப்பி அடிப்பது ஒருபக்கம் எனில் மற்ற மொழி இசைகளை சில இசையமைப்பாளர்கள் காப்பி அடிப்பது உண்டு. ஆனால், சில ரசிகர்களை அதையும் கண்டுபிடித்து டிவிட்டரில் போட்டுவிடுகிறார்கள். இந்நிலையில்தான் இசையமைப்பாளர் அனிருத் ட்ரோலில் சிக்கியிருக்கிறார். கூலி படத்தின் இசையமைப்பாளர் இவர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. அனிருத்தும், டி.ராஜேந்தரும் இணைந்து பாடிய அப்பாடல் மிகவும் துள்ளலாக இருந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். ஆனால், இந்த பாடல் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் இடம் பெற்ற ‘சவுதீகா’ பாடலை போலவே இருக்கிறது என சொல்லி, வடிவேலு காமெடியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளார் ஒருவர். இரண்டு பாடலும் கேட்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதிரியே இருக்கிறது.


Next Story