இளையராஜா வீட்டு மருமகள்!.. வனிதா சொன்னது உண்மையா?!.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!...
Vanitha vijayakumar: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் வனிதா. திருமண விஷயங்களில் குடும்பத்தை மீறி நடந்துகொண்டதால் குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் இவர். பல சர்ச்சைகளிலும் சிக்கியவர். தற்போது மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்கிற படத்தை அவரே இயக்கி நடித்திருக்கிறார்.
இந்த படத்தை அவரின் மகள் ஜோவிகாவே தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ‘மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என வனிதாவும், ஜோவிகாவும் செய்தியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். இந்த படத்தில் தனது ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘இளையராஜா வீட்டில் நான் பல நாட்கள் இருந்திருக்கிறேன். பூஜையெல்லாம் செய்திருக்கிறேன். வீட்டு சாவியே என்னிடம்தான் இருந்தது. அந்த வீட்டுக்கு நான் மருமகளா போயிருக்கணும்’ என்றெல்லாம் பதில் சொல்லி அதிர வைத்தார் வனிதா. இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக்கொண்டது.
மேலும் ‘அந்த பையன் என்னிடம் ‘என்னை காதலிக்கிறாயா?. என் அப்பாவை காதலிக்கிறாயா?’ என கேட்டான். நான் உன் அப்பாவை காதலிக்கிறேன்’ என சொன்னேன்’ என வனிதா கொளுத்திப்போட்டார். எனவே, ‘யார் அந்த பையன்?’ என்கிற கேள்வி எழுந்தது. கார்த்திக் ராஜாவும், வனிதாவும் காதலித்தார்களா என்கிற ரேஞ்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பேசினார்கள். அதன்பின் ‘இளையராஜா ஒரு லெஜெண்ட். அவர் எனக்கு அப்பா மாதிரி. கார்த்திக் ராஜா என் நண்பர். தவறாக பேசாதீர்கள்’ என டிவிட்டரில் பதிவிட்டார் வனிதா.
இந்நிலையில், இது தொடர்பாக யுடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன் ‘வனிதா பேசுவது எல்லாமே பொய். இளையராஜா குடும்பத்தில் யாரும் அப்படி இல்லை. கார்த்திக் ராஜா மிகவும் அமைதியானவர். அப்பாவின் நிழலில் வாழ்பவர். அதிகம் பேசவே மாட்டார். அவர் மீது போகிற போக்கில் சேற்றை வாரி வீசியிருக்கிறார் வனிதா. படத்தை ஓடவைக்க இப்படியெல்லாம் பேசியிருக்கிறார். அவரின் சொந்த மகனுக்கே அவரை பிடிக்காது. அதனால்தான் அப்பாவிடம் இருக்கிறான். அப்படியெனில் வனிதாவை பற்றி புரிந்துகொள்ளுங்கள்’ என சொல்லியிருக்கிறார்.