என்னது பாலா அஜீத்தை அடிச்சாரா? எல்லாம் சுத்த பொய்... அவரே பெரிய முரடன்..!

by Sankaran |
என்னது பாலா அஜீத்தை அடிச்சாரா? எல்லாம் சுத்த பொய்... அவரே பெரிய முரடன்..!
X

இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை அவர் மற்றவர்கள் மாதிரி கிடையாது. நடிகர்கள் எப்படி இருந்தாலும் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மாற்றிடுவாரு. அவங்க இமேஜ் பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டாரு. அதனால பலரும் அவரு படத்துல நடிக்க தயங்குவாங்கன்னு சொல்வாங்க. அஜீத் கூட பாலா டைரக்ஷன்ல அஜீத் நடிக்கல. நான் கடவுள் படத்துல முதல்ல அஜீத் நடிக்கிறதா தான் இருந்ததாம்.

ஆனா அதுல பாலா அடிச்சதால தான் அவரு விலகிட்டாருன்னு சொல்றாங்க. ஆனா பாலாவே அது உண்மையல்லன்னு சொல்லிட்டாரு. ஆனா தொடர்ந்து இந்த மாதிரி சர்ச்சைகள் வர என்ன காரணம்? இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்னென்ன சொல்றாருன்னு பாருங்க...

பாலான்னாலே ஒரு இமேஜ் இருக்கு. அவரு முரடன். வாயில வந்தத பேசுவாரு. யாருக்கும் அடங்க மாட்டாரு. ஹீரோவிடம் 10 நாள் குளிக்காம லுங்கிக் கட்டிட்டு இருக்கணும்னு சொன்னா யாரு சொல்லியும் கேட்க மாட்டாங்க. பாலா சொன்னா கேட்பாங்க. அந்த வகையில பாலாவோட டைரக்ஷன்ல நடிக்கணும்னு அஜீத்துக்கும் ஆசை வருது.

அது உள்ள பல பிரச்சனைகள் வந்து ஒரு கட்டத்துல நடிக்க முடியாமப் போகுது. பாலா அஜீத்தை அடிச்சிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்படி எல்லாம் அவரை அடிக்க முடியாது. அஜீத்தும் சாதாரண ஆளு கிடையாது. இப்ப வேணா சாஃப்டான ஆளா இருக்கலாம். ஆனா ஒருகாலத்துல அவரும் முரட்டுப் பேர்வழிதான்.

ajith

நான் சேது படத்து ரீமேக்குக்காகப் போனப்ப ஒரு நடிகரை அப்ரோச் பண்ணினேன்னு சொல்றாரு. அவரு இந்தி படத்துக்காகக் கூடப் போயிருக்கலாம். அஜீத் எங்கே ரீமேக்குக்கு வந்தாரு. பாலாவும் சொல்றாரு. அவரு வர்றாரு வர்றாருன்னு சொல்றாங்க. அவரு வர்ற வரைக்கும் நான் காத்திருக்க மாட்டேன்.

நான் கிளம்பிட்டேன்னு சொல்றாரு. எல்லாரும் அது அஜீத்னு சொல்றாங்க. அப்படித்தான் சோஷியல் மீடியால பரப்புறாங்க. ஆனா சொன்ன ஹீரோவே வேற. அவரும் கொஞ்சம் உஷாரா இருக்காரு. வணங்கான் திரைக்கு வரும்போது அஜீத் ரசிகர்களைக் கோவிச்சிக்க வேண்டாம்னு அவரு நினைக்காரு.

வெளிப்படையா சில விஷயங்களை அவர் பேசினாருன்னா நிச்சயமா அஜீத் ரசிகர்களுக்குக் கோபம் வரும். அப்போ அவங்க அந்தப் படத்தை வேற மாதிரி ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அதனால பாலாவைப் பாராட்டலாம். பழைய பாலாவா இருந்தா யாரு படமா இருந்தா என்னன்னுலாம் பார்க்க மாட்டாரு. பாலா எதுக்கும் பயப்பட மாட்டாரு.

உண்மையைப் பேசுவாருன்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா அவர் பொய்யும் பேசுறாரு. அந்தளவு சினிமாவைப் புரிஞ்சி வச்சிருக்காரு. வணங்கான்ல சூர்யா வெளியேறினதைப் பற்றி சொன்னதுதான். கன்னியாகுமரில கூட்டம் அதிகமாச்சு. அதனால சூர்யாவை வச்சி எடுக்க முடியலன்னா இது எவ்ளோ பெரிய பொய். யாராவது நம்ப முடியுமா?

ரஜினி எவ்ளோ பெரிய ஆளு. அவரு கூட்டத்துல நடிக்கலையா? சூர்யாவோட படம் சூட்டிங் கோயமுத்தூர்ல போயிக்கிட்டு இருக்கு. தினம் 2000 பேருக்கு மேல வந்து பார்த்துட்டு தான் போறாங்க. அதனால இதெல்லாம் பொய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story