தோளை தட்டிக் கொடுத்த சிம்பு.. பலனளிச்சதா? பயில்வான் ரெங்கநாதனின் ‘தக் லைஃப்’ விமர்சனம் இதோ

by ROHINI |
simbu
X

simbu

தக் லைஃப் படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கமல் மணிரத்தினம் இணைந்து உருவாகிய திரைப்படம் தக் லைப். தக் லைப் என்றாலே ரவுடியுடைய வாழ்க்கை. ஒரு தாதா உடைய வாழ்க்கை.அவ்வளவு மோசமானது. தாதாக்களுக்கு நன்றி விசுவாசம் இருக்காது. தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் .ஏகப்பட்ட கொலைகள் பண்ண வேண்டும் .எஸ்கேப் ஆக வேண்டும் என்பதுதான்.

இந்த படத்தில் தாதாவாக இருக்கிறார் கமல். முதலில் ஒரு இடத்தில் போலீஸுடன் சண்டை நடக்கிறது. அப்போது இடையில் ஒருவர் இறந்து விடுகிறார். அவருடைய மகன் அனாதையாக நிற்கிறான். அவருடைய மகனை காப்பாற்றுகிறார் கமல். அந்தப் பையனின் தங்கையும் அங்கு மாட்டி கொள்கிறார். அதனால் தன்னால் கொல்லப்பட்ட ஒருவரின் மகளையும் மகனையும் காப்பாற்றுகிறார் கமல்.

அதன் மூலம் தான் வளர்த்தெடுத்த மகனுக்கு பயிற்சி கொடுக்கிறார். அதுதான் சிம்பு. சிம்பவும் தன்னுடைய வளர்ப்பு அப்பாவுடன் சந்தோசமாக இருக்கிறார். ஆனால் இந்த தாதா படையை உருவாக்கியது நாசர். அவர்தான் அண்ணன். ஆனால் கமல் அவருடைய அண்ணனை மிஞ்சி விடுகிறார். இருந்தாலும் கமலுக்கும் நாசருக்கும் விரோதம் இருக்கும். அதன் பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் சுட்டு இறந்து விடுகின்றனர்.

இப்படித்தான் கதை நகர்கிறது. மூன்று கேரக்டர்களிலும் கமலஹாசனின் நடிப்பு கொடிகட்டி பறக்கிறது. சிலம்பரசனை பொருத்தவரைக்கும் நடிப்பின் முதிர்ச்சிக்கு வந்திருக்கிறார். பிரமாதமாக பண்ணியிருக்கிறார். அதுலயும் திரிஷாவின் மீது உள்ள மோகம் அந்த காட்சியில் அற்புதமாக நடித்திருக்கிறார். இனிமேல் சிம்பு நடிப்பின் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறார்.

உலகத்தில் மிஞ்சிய கேமரா கே சந்திரன் .விண்வெளி நாயகனான ஏ ஆர் ரகுமான் இசையில் அமைந்த பாடல்கள் எல்லாமே அற்புதமாக இருக்கிறது. இடையே வருகிற பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் கெட்டிக்காரர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்து இருக்கிறார். படம் விறுவிறுப்பாக போகிறது .ஆனால் நாயகன் இரண்டாம் பாகம் செக்கச் சிவந்த வானம் படத்தின் இரண்டாம் பாகம் அவ்வப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

இப்படி படத்தைப் பற்றி முழுவதுமாக பாசிட்டிவ் ஆகவே சொல்லி முடித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஆனால் படத்தை பற்றி நெகட்டிவாக எந்த விஷயத்தையும் கூறவில்லை. இதற்கு முன்பு வெளியான படங்களை பற்றி விமர்சிக்கும் போது அதில் உள்ள நிறை குறைகளை கூறுவார். ஆனால் இதில் அப்படி அவர் கூறவில்லை.

Next Story