என் நெஞ்சில வேற யாரும் கை வைக்கல!.. கண்ட இடத்துல கலர் பவுடர்!.. பிக் பாஸ் பிரபலம் கொண்டாடிய ஹோலி!..

தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றான நகைச்சுவை நிறைந்த குக் வித் கோமாளியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தர்ஷா குப்தா குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். மேலும், தர்ஷா அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு நகைச்சுவை திருவிழா, சரிகமப போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ரூத்ர தாண்டவம் படத்தின் மூலம் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து, சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஒ மை கோஸ்ட் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தர்ஷா குப்தா சமிபத்தில் நடந்து முடிந்த நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கியிருந்தார். ஆனால் குக் வித் கோமாளி அளவிற்கு தர்ஷா குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ளவில்லை. பிக் பாஸில் தர்ஷாவின் செயல் அவரின் ரசிகர்களை ஏமாற்றம் அடையச்செய்தது.
இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு தர்ஷா குப்தா தனது இன்ஷ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்தும் தலையில் ஒரு வெள்ளை நிற துணியை சுற்றிக்கொண்டு உடல் முழுவதும் வண்ணங்களை கண்ட இடங்களில் தீட்டிக்கொண்டுள்ள புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இந்த ஹோலி பண்டிகையில் உங்கள் வாழ்க்கை வெற்றியையும், செழிப்பையும், அன்பையும் பெறட்டும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்க்கு தர்ஷா குப்தாவின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.