வெட்கமா இல்லையா!.. பேரனை கூட விட்டு வைக்கலயே... ரோபோ சங்கரை பொளக்கும் புளூசட்டை மாறன்..

By :  SANKARAN
Update: 2025-05-13 03:26 GMT

கலக்கப்போவது யாரு என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். மிமிக்ரி செய்து பலரையும் கவர்ந்தார். கட்டுமஸ்தான பாடியைக் காட்டி ஒவ்வொரு பாகத்தையும் ஆட விடுவார். அதில் கிடைத்த பேரை வைத்து சில படங்களில் நடித்தார். சமீபத்தில் அவரது மகள் இந்திரஜாவின் கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

இந்தத் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. கமல் நட்சத்திரன் என்று பெயர் வைத்தார். அதை எல்லாம் போட்டோவாக எடுத்து இணையத்தில் போட்டு வந்தார். எதற்கெடுத்தாலும் வீடியோவாகப் போட்டு வரும் ரோபோ சங்கரை புளூசட்டை மாறன் வறுத்து எடுத்துள்ளார். என்னதான் சொல்றாருன்னு பாருங்க.

ரோபோ சங்கர் இம்சை தாங்கல. மக்கள் கதறாங்க. விஜய் டிவில மிமிக்ரி செய்து பேரு வாங்கினார். ஆனா தனித்துவமான காமெடி செய்யத் தெரியாதவர். தப்பு தப்பாக ஆங்கிலம் பேசி நடிப்பதுதான் இவரது காமெடி. பல படங்கள்ல மொக்கை காமெடிதான். சிவகார்த்திகேயன் இவரைக் கழற்றி விட்டதே இதுக்காகத்தான். இவருக்கு ஒரே அடையாளம்;னா காலைல கோழிகூவுற அந்த காமெடிதான்.

யூடியூப் சேனல்கள்; இவரை லீசுக்கு எடுத்து விட்டது போல. மருமகனைக் கூட விட்டு வைக்கல. குடும்பத்தோட வீடியோக்கள்ல வர்றாங்க. கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங்னு எப்போ எங்கே போனாலும் வீடியோவா போட்டு அறுக்குறாங்க.


எந்தப் புதுப்படம் வந்தாலும் செலப்ரிட்டி ஷோன்னு ஆஜராகுறாங்க. இப்போ இவர் தாத்தா. ஆனாலும் பேரனை வைத்து வீடியோ போடுறாரு. பணம் வருதுங்கறதுக்காக இப்படியா 24 மணி நேரமும் குடும்ப வீடியோவையா போடுவாரு? கூச்சமே இல்லையா? தயவு செய்து உங்க பேரனையாவது இதுல இருந்து விலக்கி வைங்க. செலப்பரிட்டின்னு சொல்லிக்கிட்டு திரியற இந்த பப்ளிசிட்டி மோகம் எரிச்சல்தான்னு பலரும் சொல்றாங்க. தாத்தா ஆனாலும் திருந்தலன்னா ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்கிறார் புளூசட்டை மாறன். 

Tags:    

Similar News