போட்டியும் கிடையாது.. அப்போ ஏம்ப்பா ஹிட் கொடுக்க முடியல? விக்ரமை சீண்டிய புளூ சட்டை மாறன்
vikram
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை போராட்டமே வாழ்க்கை என கடந்து வருகிறார் நடிகர் விக்ரம். அவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் நடிப்பையும் தாண்டி அந்த படத்திற்காக அவர் போட்ட கடின உழைப்பு நன்றாக தெரியும். எத்தனையோ கேரக்டர்களில் நடித்திருக்கிறார். விதவிதமான கெட்டப்கள் போட்டு நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு என பெரிய விருதோ அங்கீகாரமோ இதுவரை கிடைத்ததில்லை.
அது மட்டுமல்ல அவருடைய சமீபகால படங்களின் தோல்விக்கு அவர்தான் காரணம் என்றும் மக்கள் கூறி வருகிறார்கள். சரியான கதையை தேர்ந்தெடுப்பதில்லை. இயக்குனர்களும் விக்ரம் விஷயத்தில் சொதப்பி விடுகிறார்கள் என்றெல்லாம் மக்கள் கூறி வருகிறார்கள். கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன் இரண்டாம் பாகம். அந்த படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்தது.
ஆனால் அதுவும் நினைத்த வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் காசி திரைப்படம் தான் அவருடைய கமர்சியல் ரூட்டையே மாற்றிய திரைப்படம். இப்போது வரை அவர் நடித்த தில் தூள் திரைப்படம் தான் அனைவராலும் பாராட்டப்படுகிற திரைப்படமாக அமைந்திருக்கின்றன. இதில் அவருக்கு பிளஸ் என்னவென்றால் எத்தனையோ படங்கள் ஃபிளாப் ஆனாலும் அவருக்கு என ஒரு பெரிய ஓபனிங் இருக்கத்தான் செய்கின்றன.
தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருந்தாலும் அவருக்கு என எந்த ஒரு போட்டி நடிகரும் கிடையாது. விஜய், அஜித் இவர்கள் இருவர் போட்டி, சிவகார்த்திகேயன் தனுஷ் சிம்பு இவர்களுக்கிடையே போட்டி, ஆனால் விக்ரமுக்கு இந்த நடிகர்தான் போட்டி என யாருமே கிடையாது. அவருக்கு என ஒரு தனி பாதையை வைத்திருக்கிறார். விக்ரம் கெரியரை பார்க்கும் பொழுது ஜெமினி திரைப்படத்தை தான் அனைவருமே பாராட்டி பேசுவார்கள்.
vikram
அதில் எல்லாமே இருக்கும். ஆக்சன் காமெடி சென்டிமென்ட் ரொமான்டிக் என எல்லாமும் கலந்த கலவையாக இருக்கும். மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார். அப்படி ஒரு திரைப்படத்தை எப்போது கொடுக்கப் போகிறார் என்றுதான் அனைவரும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் புளூ சட்டை மாறன் திடீரென விக்ரம் பற்றி ஒரு மீம்ஸை தன்னுடைய பதிவில் வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது வைரலாகி வருகின்றன.