ஒரிஜினலை விட இது நல்லா இருக்கு.. ஜனநாயகன் போஸ்டரை கிழித்து தொங்கவிட்ட புளூ சட்டை..!

By :  Ramya
Update: 2025-01-28 08:38 GMT

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் கால் பதித்திருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தார். இதன் மூலம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.

இதனால் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்திருக்கும் நடிகர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி வருகின்றார். படம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.



அதில் படத்திற்கு ஜனநாயகன் என்கின்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாவதாக நடிகர் விஜய் தனது கையில் சாட்டையை வைத்து சுழற்றுவது போன்று நான் ஆணையிட்டால் என்கின்ற வசனத்துடன் புகைப்படம் வெளியானது. இரண்டு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் போஸ்டருக்கு பதிலாக சைனு மாஷ் என்கின்ற விஜயின் ரசிகர் தானே ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டு இருக்கின்றார். இது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் சினிமா விமர்சகர் புளு சட்டை மாறன் அதனை பாராட்டி பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'ஒரிஜினல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை விட இப்படியான ஃபேன்ஸ் உருவாக்கி இருக்கும் போஸ்டர் சிறப்பாக உள்ளன.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்தான் ஒரு படத்தின் சிறந்த முதல் இம்ப்ரசனை தர வேண்டும். ஆனால், பலகோடி செலவில் எடுக்கப்படும் பெரிய ஸ்டார்களின் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட பெரும்பாலும் ஏனோதானோ என்றுதான் இருக்கின்றன. நடிகர்களின் முகத்தை மட்டும் வைத்து மற்ற அனைத்தையும் ஃபோட்டோஷாப் போன்ற வேலைகளை செய்கிறார்கள். அதில் ஷைனு மாஷ் இங்கே செய்துள்ள அளவு நேர்த்தி இல்லை.

நடிகர்களை அழைத்து நல்ல அவுட்டோர் பின்னணியில் ஃபோட்டோக்களை எடுக்கலாம் அல்லது பக்காவான ஃபோட்டோஷூட் செய்யலாம். அதில் என்ன பிரச்னை இவர்களுக்கு உதாரணத்திற்கு குட் பேட் அக்லி போஸ்டர் பார்ப்பதற்கு செஞ்சி வச்சது போலதான் இருந்தது. ஜனநாயகன் 2nd look poster இல் சாட்டையின் நீளமே பத்தடிக்கு இருப்பது போல டிசைன் செய்துள்ளனர்.


அப்படி ஒரு சாட்டையை சுழற்ற முடியுமா? அதை எடுத்து சசுழற்றுவதற்குள் எதிரில் இருப்பவர் தப்பித்து ஓடி வெளிநாட்டுக்கே போய் விடுவார். எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் நான் ஆணையிட்டால் பாடலில் எம்ஜிஆர் கையில் உள்ள சாட்டையின் நீளத்தையோ அல்லது பாஜக அண்ணாமலையின் சாட்டையையோ பார்த்திருக்க வேண்டாமா?

இனியாவது இப்படியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நேர்த்தியாக வெளியிடுங்கள் அல்லது ஷைனு மாஷ் போன்ற திறமையாளர்களிடம் அந்த வேலையை குடுங்கள். விஜய்யின் அரசியல் வருகையை நாளிதழ் பின்னணியில் இப்படி சிறப்பாக டிசைன் செய்திருப்பது சிறப்பு. இதையே ஜனநாயகன் படத்திற்கு பயன்படுத்தலாம்' என்று விஜயின் ரசிகன் செய்த போஸ்டரை பாராட்டியும் படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரை கிண்டல் செய்தும் பதிவிட்டு இருக்கின்றனர்.

Tags:    

Similar News