போற ஸ்பீட பார்த்தா தலீவர கூப்பிட்டே பாராட்டுவாரு போலயே.. SKவின் அடுத்த வெர்ஷன்
rajini
சமீப காலமாக சிவகார்த்திகேயன் ரஜினியை ஃபாலோ பண்ணுவதாகவே தெரிகிறது. ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆனால் அந்த படத்தை பார்த்த உடனே படக் குழுவை அழைத்து தன் வீட்டிற்கு வரவழைத்து படத்தைப் பற்றியும் படத்தின் கதை அதில் நடித்தவர்களை பற்றியும் பாராட்டி பேசி பொன்னாடை எல்லாம் அணிவித்து அவர்களை வழியனுப்புவது ரஜினியின் வழக்கமாக இருந்தது.
இதை அப்படியே பாலோ செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும் பார்த்து பட குழுவை அழைத்து ஒரு மீட்டிங்கை போட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை பிரபல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் கூறியது என்னவெனில் போரின் காரணமாக டூரிஸ்ட் ஃபேமிலி டீமே சக்சஸ் மீட்டை தள்ளி போட்டுருச்சு.
ஆனா நம்ம மகா ஸ்வாமி போர்டு மீட்டிங் ரேஞ்சுக்கு பில்டப் வீடியோவை இறக்கி இருக்காரு. அடுத்த வாரம் எந்த படக்குழுவை கூப்பிட்டு போர்டு மீட்டிங் நடத்தி ஆசி வழங்கப் போறாரோ என தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பல கமெண்ட்களை பதிவிட்டு இருக்கின்றனர். அதில் ஒருவர் சிவகார்த்திகேயன் போற ஸ்பீடுக்கு அடுத்து நம்ம தலைவரை கூப்பிட்டு கூட பாராட்டுவாரு போலயே என பதிவிட்டு இருக்கிறார்.
இதுக்கெல்லாம் ஒரே காரணம் அந்த வெங்கட் பிரபு தான். தேவையில்லாத சீன வச்சு துவக்கி வச்சதே அவர்தான் .இப்ப பாரு என்னவெல்லாம் நடந்துகிட்டு இருக்குன்னு என இன்னொரு ரசிகர் கமெண்ட் போட்டு இருக்கிறார். கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் அவருடைய துப்பாக்கியை கொடுத்து நீங்க பாத்துங்கோங்கனு சொல்லி கொடுத்துவிட்டு போவாரு.
அதிலிருந்தே சிவகார்த்திகேயன் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் இதை தொடர்புபடுத்தியே அவரை கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படமும் பராசக்தி திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளது.