நல்லா சப்பைக்கட்டு கட்டுறாரு 'Work From Officer'.. விஜயை டார் டாராக கிழித்த ப்ளூ சட்டை!..

by Ramya |   ( Updated:2024-12-28 08:46:06  )
Blue Shirt Maran
X

Blue Shirt Maran

நடிகர் விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சியை தொடங்கியிருக்கின்றார். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தனது கட்சியின் கொடி, பாடல், முதல் மாநாடு என அனைத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார்.

சினிமாவில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கும் நடிகர் விஜய் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார். இப்படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருக்கின்றார். இது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் தலைவராக தனக்கு இருக்கும் கடமைகளை செய்து வருகின்றார். இதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார் நடிகர் விஜய்.




பனையூர் பண்ணையார்: பொதுவாக அரசியலில் களமிறங்கி விட்டால் மக்களுடன் மக்களாக நின்று பணியாற்ற வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் நடிகர் விஜய் அப்படி இல்லாமல் தான் வெளியில் வந்தால் கூட்டம் கூடிவிடும், பிரச்சனையாகும் என்று கூறிக்கொண்டு வீட்டிலேயே இருந்து வருகின்றார். சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யாமல் அவர்களை பனையூரில் இருக்கும் தனது கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து உதவி செய்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதனை தொடர்ந்து தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டில் உருவப் படத்தை மாட்டி அதற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு வேலு நாச்சியாரின் நினைவு தினத்திற்கும் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். இதை பார்த்த பலரும் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்யும் ஒரே தலைவர் விஜய் தான் என்று விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் பனையூர் பண்ணையார் என்றெல்லாம் சமூக வலைதள பக்கங்களில் கேலி கிண்டல்கள் அதிகரித்து வருகின்றது. தான் வெளியில் வந்தால் கூட்டம் கூடிவிடும் என்று எண்ணுபவர் எதற்கு அரசியலில் களமிறங்க வேண்டும். படங்களில் நடித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லவா என்பது பலரின் கருத்தாக இருந்து வருகின்றது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இன்று கேப்டன் விஜயகாந்த் இறந்து ஒரு வருடம் ஆகின்றது. அவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல ஊர்களில் இருந்து மக்கள் சாரை சாரையாக படையெடுத்து வந்து அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் நடிகர் விஜய் அப்படி நேரில் வந்து அஞ்சலி செலுத்துவது குறித்தும், அட்லீஸ்ட் எப்போதும் போல் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவார். அதைக்கூட செய்யவில்லை என்று விமர்சனம் செய்திருக்கின்றார். தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர் தெரிவித்திருந்ததாவது 'வெளியே வந்தா, கூட்டம் கூட தான் செய்யும்.

முறைப்படி காவல்துறை கிட்ட அனுமதி வாங்கணும். அதையும் மீறி பிரச்சனை வந்தால் நீதிமன்றத்தை நாடனும். அதை விட்டுவிட்டு கூட்டம் கூடிரும்னு சப்பைக்கட்டு கட்டி Work from home பண்ணியே காலத்தை ஓட்டக்கூடாது. இன்றைக்கு விஜயகாந்த் நினைவு நாள் உங்கள் வளர்ச்சிக்கு கை கொடுத்த அவரை நேரில் போய் அஞ்சலி செலுத்த மாட்டீங்க. அட்லீஸ்ட் ஆபீஸ்ல இருந்துட்டே அஞ்சலி செலுத்தற, அந்த சம்பிரதாய ட்வீட்டையாவது காலைல போட்டா என்ன? என்று காட்டமாக விமர்சித்து பதிவு வெளியிட்டிருக்கின்றார்.

Next Story