படத்துல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்!. நிஜத்தில் ‘நோ கமெண்ட்ஸ்’.. ரஜினியை பங்கும் செய்யும் மாறன்!.

Rajinikanth: நிஜவாழ்வில் சாதாரண மனிதர்கள் செய்ய முடியாதை ஒன்றை திரையில் ஒரு நடிகர் செய்யும்போது அவர் ஹீரோவாக மாறிவிடுகிறார். நம்மால் முடியாததை ஹீரோ செய்யும் போது அதை தானே செய்தது போல சந்தோஷப்பட்டு கைத்தட்டுவான் ரசிகன். இந்த உளவியலால்தான் சினிமாவில் வரும் ஹீரோக்கள் ரசிகனுக்கு ஆபத்பாந்தவனாக தெரிகிறார்கள்.

சினிமாவில் 50 பேரை அடித்து துவம்சம் செய்யும் ஒரு ஹீரோ நிஜ வாழ்வில் அப்படி 50 பேரை அடிக்க முடியுமா? என ரசிகன் யோசிப்பதில்லை. இந்த லாஜிக் புரிந்தால் ரசிகர்கள் தியேட்டரில் முதல் காட்சி பார்க்க அதிகாலையே போக மாட்டார்கள். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய மாட்டார்கள்.

ஆனாலும், இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள் நிஜ வாழ்வில் ஹீரோக்கள் இல்லை என்பது அவர்களின் ரசிகர்களுக்கு புரியாது. இது புரிந்தால் எல்லாம் மாறிவிடும். இப்போதும் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 70 வயதை தாண்டியும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினி., இப்போது வேட்டையன் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஷ்டாக நடித்திருக்கிறார்

சினிமாவில் தைரியமாக செயல்படும் ரஜினி நிஜவாழ்வில் அப்படி கிடையாது. அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி 25 வருடங்களாக அவரின் ரசிகர்களை நம்பவைத்து தனது படங்களை ஓடவைத்து கடைசியில் ‘ஹெல்த் கண்டிஷன் சரியில்லை’ என சொல்லி எஸ்கேப் ஆனவர்தான் ரஜினி.

செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் சிரித்துக்கொண்டே மழுப்பலாக பதில் சொல்வது ரஜினியின் வழக்கம். நாட்டில் எவ்வளவு சீரியஸான பிரச்சனை என்றாலும் சரி. அது பற்றி வாயை திறக்க மாட்டார். ஏனெனில், யாரின் கோபத்திற்கும் நாம் ஆளாகி விடக்கூடாது என்பதே ரஜினியின் கொள்கை.


இப்போது லட்டு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என சொல்லிவிட்டார் ரஜினி. இந்நிலையில், பிரபல யுடியூப் சினிமா விமர்சகரும், ரஜினியை தொடர்ந்து கலாய்த்து வருபவருமான புளூசட்ட மாறன் வடிவேலு மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். படத்துல உங்க கேரக்டர் என்ன?.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. என்கவுண்டர் பற்றி உங்க கருத்து?.. நோ கமெண்ட்ஸ்’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.

Related Articles
Next Story
Share it