ஷங்கருக்கு தொடர் தோல்வி!.. சுஜாதா இல்லாததுதான் காரணமா?!... பிரபலம் சொல்வது என்ன?!...

by Murugan |   ( Updated:2025-01-18 14:31:08  )
sujatha, shankar
X

இயக்குனர் ஷங்கரின் படங்கள் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர்ந்து ட்ரோலை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபையர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

ஜென்டில்மேன்: ஷங்கரோட கிராப்ட்டைப் பார்த்தால் முதல்ல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் ஒரு கதை சொல்றாரு. ஒரு லவ் ஸ்டோரி சொல்றாரு. அதுக்கு எனக்கு இது வேணாம். சரத்குமார் கால்ஷீட் இருக்கு. அதுக்காக ஒரு ஆக்ஷன் ஸ்டோரி உருவாக்குங்கன்னு சொல்றாரு. அப்படி உருவானதுதான் ஜென்டில்மேன்.

பழைய குரு: இந்தக் கதையே பழைய குரு என்ற கமலின் படம். அதுலயும் கொள்ளை அடித்து மருத்துவமனை கட்டுவாரு. அதைப் பெரிய அளவில் ஹிட்டா கொடுத்தார் ஷங்கர். அன்னைக்கு ஏ.ஆர்.ரகுமான் மியூசிக்ல ஹிட்டான பாடல்களைக் கொடுத்தாரு. அதே மாதிரி காதலன், முதல்வன், இந்தியன்னு வரிசையா ஹிட் வந்தது. அந்நியன் படத்துல இருந்துதான் அவருக்கு ஒரு டிராபேக் ஆகுது.

பாலகுமாரன் தான்: அந்நியன், ஐ படங்களைச் சொல்லலாம். 2.O படம்கூட வசூல் ரீதியா வெற்றின்னாலும் விமர்சன ரீதியாகத் தாக்குதல்தான். அப்புறம் இந்தியன் 2, இப்போ கேம் சேஞ்சர் வரை வந்துட்டு. ஷங்கரோட முதல்படம் ஜென்டில் மேன். 2வது படம் காதலன். இந்த இரண்டுக்குமே பாலகுமாரன் தான் வசனம்.


சுஜாதா காரணமல்ல..: இந்தியன்ல தான் சுஜாதா, கமல், ஷங்கர்னு வர்றாங்க. அதனால சுஜாதா இல்லங்கறதால தான் ஷங்கர் வீழ்ச்சின்னு சொல்ல முடியாது. இதே சுஜாதா ஷங்கரை விட்டுத் தனியாக காந்தி கிருஷ்ணா என்ற இயக்குனருடன் பணியாற்றியுள்ளார். அந்தப் படம் சரியாகப் போகவில்லையே. அது ஏன்? அதனால இந்தியன் வெற்றில சுஜாதாவின் பங்கும் இருந்ததுன்னு சொல்லலாம்.

புஷ்பா மாதிரி: ஆந்திராவைப் பொறுத்தவரை அல்லு அர்ஜூனின் வெற்றியைப் பலருக்கும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால புஷ்பா மாதிரி பெரிய வெற்றியைக் கொடுக்கணும்னு பலரும் போட்டி போடுறாங்க. அந்த நேரத்துல ராம்சரணின் இந்தப் படம் ட்ரோல் ஆகிடுச்சு. எஸ்.ஜே.சூர்யாகிட்ட பேசுற காட்சிகளைக் கட் பண்ணிப் போடுறாங்க.

புரொமோஷனுக்கு 50 கோடி: அதனால ராம்சரணுக்கு பெரிய அதிர்ச்சிதான். தயாரிப்பாளர் தில்ராஜூவும் புரொமோஷனுக்கு மட்டுமே 50 கோடிக்கு மேல செலவு பண்ணிருக்காரு. வாரிசு படத்துல அவர் போட்ட செட் வீட்டையே விற்றது உண்மைதான். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா பிரம்மாண்டம், புதுமைன்னு அதை இதைக் காட்டுறதை விட கதை அம்சமாக இருந்தால் தான் படம் ஓடும். இனி தயாரிப்பாளர்கள்தான் விழிப்புடன் இருக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரிபீட்டடா இருக்கு: ஷங்கர் பேட்டி கொடுக்கும்போது இன்னும் பாசிடிவ்வான விமர்சனம்தான் எனக்கு வருதுன்னு சொல்றாரேன்னு கேள்வி கேட்கும்போது சபையர் இப்படி பதில் சொல்கிறார். கேம் சேஞ்சர் படத்துல வர்ற விமர்சனம் என்னன்னா உங்க படத்துல வர்ற காட்சியே ரிபீட்டடா இருக்கு. இந்தியன், சிவாஜி, முதல்வன்ல வர்ற மாதிரி இருக்கு. அதை இன்னும் அவர் உணரவில்லைங்கறதுதான் அவரோட இன்டர்வியுவைப் பார்க்கையில தெரியுது.

Next Story