திருமணத்திற்கு அதிகாலையில் வந்த எம்ஜிஆர்... அடுத்தும் ராஜேஷூக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி!

By :  SANKARAN
Published On 2025-05-29 16:40 IST   |   Updated On 2025-05-29 16:40:00 IST

தமிழ்த்திரை உலகில் மறக்க முடியாத குணச்சித்திர நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதிக்கட்டத்துல அவரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்று தன் நண்பர்களிடம் ராஜேஷ் கூறியுள்ளாராம்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் சின்ன ரோலில் ராஜேஷ் நடித்தார். சிவாஜியின் தீவிர ரசிகர். ஜோசியத்தில் ஈடுபாடு கொண்டவர். நீங்கதான் திருமணத்தை நடத்தி வைக்கணும்னு சிவாஜியை அழைத்தார் ராஜேஷ். அவரும் சம்மதித்தார். நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப ராஜேஷ் எம்ஜிஆரையும் திருமணத்திற்கு அழைத்தார்.

அன்றைய தினம் அவர் முதல்வராக இருந்ததால் நிறைய அரசு அலுவல்கள் இருந்தன. அதனால் வர வாய்ப்பில்லை. ஆனால் என்னோட ஆசிர்வாதம் எப்பவும் உனக்கு உண்டுன்னு எம்ஜிஆர் சொன்னாராம். அதே நேரத்தில் சிவாஜிக்கும் கல்யாணத்திற்குப் போவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்ததாம்.

எம்ஜிஆர் கல்யாணத்து அன்று ராஜேஷை போய் சந்திக்க வேண்டும் என்பதால் காலை 6.3 மணிக்கு திடீர்னு கிளம்பி அவர் வீட்டுக்குப் போய் சந்தித்து ஆசிர்வாதம் பண்ணிவிட்டு ஒரு சூட்கேஸைக் கொடுத்தாராம். அதில் 5 லட்சம் ரூபாய் இருந்ததாம். ராஜேஷ் அதுவரை எம்ஜிஆர் மீது வைத்திருந்த ஒரு நம்பிக்கை தூள் தூளாகப் போனதாம்.


சிவாஜியும் அன்றைய தினம் சூட்டிங் இருந்ததால் கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்ற தகவலைச் சொல்லி விட்டாராம். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். 

நடிகர் ராஜேஷ் ஆசிரியராக இருந்து அந்த வேலையை சினிமா மோகத்தால் உதறித்தள்ளிவிட்டு நடிக்க வந்தவர். இவரது தமிழ் உச்சரிப்பு வெகு நேர்த்தியாக இருக்கும். நடிகர் எஸ்எஸ்.ஆருக்குப் பிறகு இவரது வசன உச்சரிப்பு தான் அழகு. நடிகர் ராஜேஷ் சிவாஜியைப் போல இருந்ததால் அவரது நடிப்பையும் பலர் ரசித்தனர். அதே வேளையில் சிவாஜியின் நடிப்புக்கு ராஜேஷ் தீவிர ரசிகராகவும் இருந்தார்.

அவர் சமீபத்தில் ஐசரி கணேஷ் திருமணத்தில் அவரை சந்தித்தபோது 99 வயது வரை எப்படி வாழ வேண்டும் என சொல்லித்தருகிறேன். வீட்டுக்கு வாங்க என்றும் தெரிவித்து இருந்தாராம்.

Tags:    

Similar News