ரஜினி குடிக்காத குடியா... பெரிய இவரு மாதிரி பேசுறாரே மிஷ்கின்... பொளந்து கட்டிய பிரபலம்

by Sankaran |   ( Updated:2025-01-24 03:30:31  )
ரஜினி குடிக்காத குடியா... பெரிய இவரு மாதிரி பேசுறாரே மிஷ்கின்... பொளந்து கட்டிய பிரபலம்
X

சமீபத்தில் பாட்டல் ராதா படவிழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு திரைஉலகையே அதிரச் செய்து விட்டது. இப்படியா பேசுவாருன்னு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலுவும் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

மூன்று முகம்: சூப்பர்ஸ்டார் பியூ.சின்னப்பால, நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம்பிள்ளைன்னு அந்தக் காலத்தில் இருந்தே குடியால் அழிந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. ரஜினிகாந்த் சொல்லாததா? நான் குடிக்காத குடியான்னு. மூன்று முகம் படத்துல ரஜினி இந்தக் கையில பாட்டலை வச்சிட்டு இந்தக் கையில ஊத்திக் குடிப்பாரு.

பெரிய புடலங்காய் இயக்குனர்: இப்படில்லாம் இருக்கும்போது நான் வந்து தொழில்முறைல காய்ச்சுவேன். சோடா கலக்காம குடிப்பேன். அப்புறம் இது அதுன்னு என்ன பேச்சு பேசுற? வச்சான் பாரு அருள்தாஸ் உண்மையிலேயே. அருமையான பேச்சு. என்ன பெரிய புடலங்காய் இயக்குனர்?

சொந்த மூளை இருக்கா?: எல்லாம் ஜப்பான், கொரியா படத்துல இருந்து உருவி எடுத்துக்கிட்டு அங்க இருக்குற ஷாட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு, ஒரு சொந்த மூளை இருக்கா? அப்படி எடுத்துக்கிட்டு சண்முகராஜாங்கற பேரை மிஷ்கின்னு போட்டுக்கினு கண்ணாடியைப் போட்டுக்கிட்டு இவரு என்னமோ நிமிர்ந்தே பார்த்துக்குவாரு.

3 பக்கமும் புக்: மேடையில எவன் இருந்தாலும் சரி. அவர் கக்கூஸ்ல 3 பக்கமும் புக் அடுக்கி வச்சிருப்பாராம். அந்த நேரத்தைக்கூட வீண் அடிக்காம எடுத்துப் படிச்சிக்குவாராம். அவ்ளோ நேரமா மலம் கழிப்பாரு போல. நான் இவ்ளோதான் பேசுவேன். அந்த மேடையில் அருள்தாஸ் உள்பட பாடலாசிரியர் தாமரை மிகப்பிரமாதமான கண்டனம் தெரிவித்துள்ளார்.


பிசாசு 2: நிறைய பெண்கள் இருக்காங்க. இவ்வளவு வல்கரா மேடையில பேசுற. ஒரு மன்னிப்பும் கேட்கல. வருத்தமும் தெரிவிக்கல. பிசாசு 2 படத்தை இவரு நாலு வருஷமா எடுத்தாரு. என்ன ஆவான் தயாரிப்பாளர். ஒரு ஷாட் எடுத்துட்டுப் பார்த்துக்கிட்டே இருப்பாராம். நாலு மணி நேரம் சும்மாவே இருந்துட்டு பேக்கப்னு சொல்வாராம். அப்படின்னா என்ன ஆவான் அந்த தயாரிப்பாளர்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story