வாங்கின அடி அப்படி... முரட்டு கூட்டணியில் சீயான் விக்ரம்.. இந்த முறை தப்பிப்பாரா..?

Chiyan vikram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் தன்னை வருத்தி வித்தியாசமான தோற்றத்துடன் மக்களை மகிழ்விக்கும் உன்னத கலைஞன் சியான் விக்ரம். தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் இவரின் படங்கள் காலத்துக்கும் தனி அடையாளத்தை கொண்டிருக்கும். ஏதோ வந்தோம்.. கடமைக்கு நடித்தோம்.. சும்மா நாலு ஃபைட்.. நாலு சாங் என்று இவரின் படங்கள் இருக்காது.
வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்டு அதில் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை தனது அசுரத்தனமான நடிப்பால் கட்டிப்போட்டு என்டர்டைன் செய்வதில் வல்லவர் சியான். அப்படி தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் கதைகளை செலக்ட் செய்து அசால்டாக நடித்துக் கொடுப்பார். அப்படி நடிக்கும் சில படங்கள் இவருக்கு பெயரைப் பற்றிக் கொடுத்தாலும் அது வணிகரீதியாக எந்த ஒரு லாபத்தை கொடுப்பதில்லை.
விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஹிட் படம் இது என்று அவரது ரசிகர்களிடம் கேட்டால் அவர்களே நீண்ட நாட்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி அவர் கடைசியாக ஹிட் படம் கொடுத்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. விக்ரம் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது புதுமை இருந்தாலும் அது வணிக ரீதியாக வெற்றியடைய தவறி வருகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ”வீர தீரன் சூரன்” திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு டீசன்ட்டான வெற்றியை பதிவு செய்திருந்தது.

தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் விக்ரம் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி போட்டுள்ளார். பட்ட அடியில் புத்தி தெளிந்து கதை தேர்வில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இது அவரின் 63வது திரைப்படமாகும்.
எப்படியாவது இந்த முறை ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ள சீயான் விக்ரமை இந்த இளம் இயக்குனர்கள் கரை சேர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.