{"vars":{"id": "76339:5011"}}

இளையராஜாவே வேண்டாம்… அந்த மியூசிக் டைரக்டரை கூப்பிட்டு வாங்க.. ராமராஜனின் சூப்பர் ஐடியா!..

 
இளையராஜா உச்சத்தில் இருந்த சமயத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் என அனைவருக்குமே அவர் தான் இசையமைத்து வந்தார். அதிலும், எல்லா ஹீரோக்களுமே ஒரேநேரத்தில் நிறைய படங்களிலும் நடித்து வந்தனர். இதனால் இளையராஜா பாடலை கம்போசிங் முடித்தால் தான் படத்தின் ரிலீஸ் தேதியே முடிவு செய்யலாம் என்ற நிலை இருந்தது. இதனால் நடிகர் ராமராஜன் தான் நடிக்க இருந்த ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டாம். அவர் ஏற்கனவே ரொம்ப பிசியாக இருக்கிறார் என முடிவெடுத்தாராம். ராமராஜனை அறிமுகப்படுத்திய தயாரிப்பு நிறுவனத்தில் மேளம் கொட்டு தாலி கட்டு திரைப்படம் தான் அது. இப்படத்தில் பாண்டியன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தான் மலையாளத்தை சேர்ந்த பிரேம கேமதேசா என்பவரை இசையமைப்பாளராக முடிவெடுத்து இருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். ஆனால் இதில் ராமராஜனுக்கு உடன்பாடு இல்லையாம். கங்கை அமரனை போடலாமே எனக் கேட்க அவரிடம் சொல்லிவிட்டாச்சு. அவரே இசையமைக்கட்டும் என்கின்றனர். வேறுவழியில்லாமல் சரியென தலையை ஆட்டினார்களாம். ஆனால் அவர் இசையமைத்த எந்த பாட்டுமே சரியாக இல்லாமல் இருந்திருக்கிறது. படத்தின் ரீ-ரெக்கார்டிங் சமயத்தில் அந்த இசையமைப்பாளர் வராமல் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இன்னொரு கவிஞர் மூலம் தேவாவின் அறிமுகம் வந்ததாம். மாட்டுக்கார மன்னாரு படத்தினை இசையமைத்து முடித்து இருந்த நேரம் அது. இருந்து வயலின் வாசிப்பதை தொழிலாக செய்து வந்த தேவா இசையமைப்பாரா என படக்குழு சந்தேகம் வேறு இருந்ததாம். இருந்தும் அவருக்கு தேவையானதை சொல்லி ரீ-ரிக்கார்டிங் முடித்துள்ளனர். அதில் திருப்தியான ராமராஜன் தன்னுடைய அடுத்த படமான மனசுக்கேத்த மகராசா திரைப்படத்தில் தேவாவை இசையமைக்க வைத்திருக்கிறார். 89 ஆவது வருடம் தீபாவளி தினத்தில் எட்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் அதில் ஏழு திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த ஒரு படத்திற்கு மட்டுமே தேவா இசை அமைந்து இருந்த நிலையில் படம் 100 நாள் அமோகமாக ஓடி வெற்றி பெற்றதாம். அதிலும் அந்த படத்தின் தயாரிப்பாளர் வடபழனி குருக்கள் என்பது இன்னும் சுவாரசியமான தகவலாக கூறப்படுகிறது.