டேய் பேசிக்கிட்டிருக்கேன்ல!. திடீரென விஜய், டிடிஎஃப் வாசனை நினைவுப்படுத்திய கூல் சுரேஷ்!.. ஏன்?..

சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்ததால் கூல் சுரேஷ் தியேட்டர்களில் திரைப்படங்களை புரமோட் செய்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் விதவிதமான கெட்டப்பில் வந்து படத்தை பார்க்கும் கூல் சுரேஷ் இன்று சூர்யா விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியான ஃபீனிக்ஸ் படத்தை பார்க்க ஒரு விதமாக சென்றுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கூல் சுரேஷ் சாக்லேட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து காக்க காக்க, தேவதையைக் கண்டேன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். பின்பு, படித்தவுடன் கிழித்து விடவும் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அதையடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்று அனைவரின் கவனம் பெற்றார்.

கூல் சுரேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தாலும் சமீப காலமாக அவரால் ஏற்படும் சர்ச்சைகளால் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறார். மேலும், சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு அவரை ட்ரெண்டிங்கில் வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று சூர்யா சேதுபதியின் ஃபீனிக்ஸ் படத்தை சின்ன வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு பார்க்க வந்த கூல் சுரேஷ் தான் பேசும் போது குறுக்கே பேசிய சிறுவனை கத்தி அதட்டியுள்ள வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அவர் பேசும் போது, அந்த சிறுவனின் சைக்கிளில் தான் வந்தேன் என்றும் அவனுக்கு வாடை காசும் தருகிறேன் எனக் கூறியதும் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இருந்தாலும், சிறுவனை கூல் சுரேஷ் திடீரென கத்தியதை பார்த்ததும் பலருக்கும் விஜய் பிரஸ் முன்பாக பேசிக்கிட்டிருக்கேன்ல என கத்தியதும், டிடிஎஃப் வாசன் கத்தியதும் தான் நினைவுக்கு வருகிறது. கூலை இழந்து கத்திவிட்டாரே இனிமேல் இவர் பெயர் கூல் சுரேஷ் இல்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.