இனியாவது இப்படி புலம்பறதை நிறுத்துங்க தலீவரே… கூலி டிரெய்லரை கலாய்க்கும் புளூசட்ட மாறன்

by Akhilan |   ( Updated:2025-08-03 08:06:16  )
இனியாவது இப்படி புலம்பறதை நிறுத்துங்க தலீவரே… கூலி டிரெய்லரை கலாய்க்கும் புளூசட்ட மாறன்
X

Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அதை கலாய்க்கும் விதமாக புளூசட்ட மாறன் போட்டிருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, ஷொபீன் ஷாபீஎ, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அமீர்கான், பாலையா என டாப் ஹிட் பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ஓவர் பில்டப் இல்லாமல் கதைக்கு சரியாக எடிட் செய்து வெளியாகி இருக்கும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் புளூசட்ட மாறன் இப்படத்தின் டிரெய்லரை தற்போது விஜயுடன் சேர்த்து வைத்து விமர்சித்து இருக்கிறார். அவர் குறிப்பிடும் போது, கூலி டிரெய்லரின் இறுதியில் காக்கா சத்தத்தை பார்த்து கலாய்ப்பது போல நடித்துள்ளார் தலீவர்.‌

அதற்குமுன், 'இந்த தேவாவை பத்தி தெரிஞ்சிருந்தும் எங்கிட்டயே விளையாடி இருக்க' என்ற வசனத்திலும் விஜயை சீண்டியுள்ளார். இதில் இருந்து அவருக்கு விஜய் மீதான‌ கோவமும், எரிச்சலும், பயமும் தெளிவாகவே தெரிகிறது.

தேர்தலில் விஜய் ஜெயித்தாலுமே இவருக்கு பிடிக்காது. மீண்டும் நடிக்க வந்தாலும் கூட இவருக்கு பிடிக்காது. இவருக்கு தற்போது விஜய் செமத்தியாக செக் மேட் வைத்துள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்தான் கழுகு‌. இவர்தான் காக்கா. இனியாவது இப்படி புலம்பறதை நிறுத்துங்க தலீவரே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story