A சர்ட்டிபிகேட் பிரச்சனதான்!.. ஆனாலும் கூலி வசூலை அள்ளும்!.. எப்படி தெரியுமா?..

by Murugan |
A சர்ட்டிபிகேட் பிரச்சனதான்!.. ஆனாலும் கூலி வசூலை அள்ளும்!.. எப்படி தெரியுமா?..
X

Coolie Vs War 2: கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார். 35 வருடங்களுக்கு பின் ரஜினி நடித்திருக்கும் ஒரு படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. கூலி படத்திற்கு வன்முறை காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இது தெரியாமல் ஆபாச காட்சிகளுக்கு ஏ சான்றிதழ் என நினைப்பவர்களும் இருப்பதால் அது படத்தின் வசூலை பாதிக்கும் சிக்கல் உண்டு.

சென்சார் விதிமுறைப்படி ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கவேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பி.வி.ஆர் போன்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே இதை பின்பற்றுவார்கள் என்பதால் வசூலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.


ஆனால் வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களில் இதை கண்டிப்பாக பின்பற்றுவார்கள் என்பதால் அங்கே ரசிகர்கள் குடும்பத்துடன் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது கண்டிப்பாக வசூலை பாதிக்கும். அதேநேரம் கூலிக்கு சாதகமான சில விஷயங்கள் நடந்திருக்கிறது. கூலி வெளியாகும் ஆகஸ்டு 14ம் தேதி ஹிரித்திக் ரோஷனும் ஜுனியர் என்.டி.ஆரும் இணைந்து நடித்துள்ள வார் 2 படமும் வெளியாகவுள்ளது. இதனால் ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் கூலி படத்தின் வசூல் பாதிக்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் வார் 2 படத்தில் படம் துவங்கி 35 நிமிடங்கள் கழித்தே ஜுனியர் என்.டி.ஆர் வருகிறாராம். இதை தெலுங்கு சினிமா ரசிகர்கள் ரசிக்கமாட்டார்கள். எனவே இந்த படத்தால் கூலி படத்தின் வசூல் பாதிக்காது என்றே கணிக்கப்படுகிறது. அதேப்போல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆகஸ்டு 14ம் தேதி எந்த புதிய படமும் வெளியாகவில்லை என்பதால் கூலி படம் அங்கு நல்ல வசூலை அள்ளும் என்றே சொல்லப்படுகிறது.

Next Story