கூலி திரைப்படத்தில் வில்லன் நாகர்ஜூனாவின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா? பிரம்மாண்டமா இருக்கே!

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது கடைசிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.
அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், ஷொபீன் ஷாபீர், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அமீர்கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது ரஜினிகாந்த் படங்களில் மற்ற பிரபலங்களை கேமியோ ரோலில் களமிறக்குவது வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது கூலி படத்தின் வில்லனாக இன்னொரு ஸ்டார் பிரபலமான நாகர்ஜூனாவை இறக்கி இருப்பதே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

இப்படத்தில் இதுவரை அமைதி மற்றும் காதல் காட்சிகளில் நடித்த நாகர்ஜூனா தற்போது கொடூரமான வில்லன் சைமனாக இப்படத்தில் நடித்திருப்பதாக லோகேஷ் தொடர்ந்து பலரும் டிரெய்லர் விழாவில் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அவர் கேரக்டரின் மீது பெரிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நாகர்ஜூனாவுக்கு சம்பளமாக 24 கோடி வரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை விட குறைவு என்றும் கூறப்படுகிறது.