2.0 படத்தை ஓவர் டேக் பண்ணிய கூலி!.. ஓடிடி ரைட்ஸ் பிஸ்னஸ் இவ்வளவு கோடியா?!...
Coolie: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் பட்டத்தை கையில் வைத்திருப்பவராகவும் இருப்பவர் ரஜினிகாந்த். அபூர்வராகம் படத்தில் துவங்கிய பயணம் 50 வருடங்களை தாண்டிவிட்டது. 72 வயது ஆகியும் இன்னமும் ஆக்டிவாக, அதுவும் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் ரஜினி.
அவர் சில தோல்விப் படங்களை கொடுக்கும்போது அவரின் எதிரிகள் அவரை ஏளனமாக பேசி சிரித்தால் அடுத்த படமே ஹிட் கொடுத்து அவர்களின் வாயை அடைக்கும் திறமை கொண்டவர்தான் ரஜினி. அவரின் பாபா படம் தோற்றபோது சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள். அடுத்து சந்திரமுகி எனும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்து தான் எப்போது மாஸ் மகாராஜா என காட்டினார்.
தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக போகவில்லை என சிலர் சந்தோஷப்பட ஜெயிலர் படத்தை கொடுத்து நான் எப்போதும் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்து காட்டினார். இந்த படம் 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன்பின் வெளியான வேட்டையன் படம் பெரிய வெற்றியை பெறவில்லை.
இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜோடு ரஜினி இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், லோகேஷ் படமென்றால் ஆக்சன் காட்சிகள் அசத்தலாக இருக்கும்.
எனவே, பாஷா படத்திற்கு பின் ரஜினி ரசிகர்களுக்கு கூலி படம் ஒரு சூப்பர் விருந்தாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் சத்தியராஜ். நாகார்ஜுனா, கன்னட மொழி நடிகர் உபேந்திரா ஆகியோரும் நடித்து வருகிறார். ஒரு பக்கா பேன் இண்டியா படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் (ஓடிடி) உரிமையை அமேசான் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறதாம். இதுவரை ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான 2.0 படம்தான் ரஜினி படங்களில் அதிக ஓடிடி விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதாவது 110 கோடி. இப்போது கூலி அந்த படத்தின் வியாபாரத்தை ஓவர்டேக் செய்திருக்கிறது.