கூலி பட விழாவில் 4 பேர் மட்டும்தானா? ஆக.2ம் தேதி நடக்கப்போகும் தரமான சம்பவம்..

by Murugan |   ( Updated:2025-07-31 14:15:03  )
coolie
X

Coolie :சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் இதுவும் படத்திற்கு பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே படக்குழு புரமோஷன் வேலைகளை துவங்கியுள்ளது.

இந்த படம் ஒரு பேன் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியாக உள்ளது. எனவே கூலியை வைத்து 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட வேண்டும் என சன் பிக்சர்ஸ் கணக்கு போட்டிருக்கிறது. அதனால்தான் நாகர்ஜுனா,அமிர்கான்,உபேந்திரா,சௌபின் சாகிர் என எல்லா மொழிகளிலிருந்தும் நடிகர்களை இறக்கியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு பெரிய அளவில் ஆடியோ லான்ச் நடத்தும் திட்டம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இல்லை. ஆனால் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் படத்தின் ஃப்ரி ரிலீஸ் விழா நடைபெறவுள்ளது. ரஜினி சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டதையும் இதில் கொண்டாடப்போகிறார்களாம்.

இந்த விழாவில் ரஜினி,கலாநிதி மாறன்,லோகேஷ் கனகராஜ்,அனிருத் ஆகிய 4 பேர் மட்டுமே மேடையில் பேசப்போகிறார்களாம். ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது அந்த படத்திற்கு புரமோஷனாக அமைந்த நிலையில் கூலி விழாவிலும் ரஜினி என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Next Story