கூலி படத்துக்கு ரஜினி தரப்பு கேட்கும் ரவுண்ட் சம்பளம்... ஒப்புக்கொள்ளுமா சன் பிக்சர்ஸ் நிறுவனம்...?

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தில் அவருக்கு இன்னமும் சம்பளம் கொடுக்காமல் இருக்கும் நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தயாரித்து இருக்கிறார். இதுவரை லோகேஷின் இயக்கத்தில் வெளியான ஐந்து படங்களுமே மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் லோகேஷை தன்னுடைய அடுத்த இயக்குனராக ஒப்பந்தம் செய்தார் ரஜினிகாந்த். ஆனாலும் இது லோகேஷின் டிரேட்மார்க் ஸ்டைலான எல்சியூ இல்லாமல் புது ஸ்டைலில் இப்படத்தினை இயக்க வேண்டும் என்பதும் ரஜினிகாந்தின் கண்டிஷனாக சொல்லப்பட்டு இருக்கிறதாம்.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நாகர்ஜூனா வில்லனாக நடித்து இருக்கிறார். மேலும், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஷொபீன் ஷாஹீர், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். மேலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.

அனிருத் இசையில் அவர் ஆடி இருக்கும் மோனிகா பாடல் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் அடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சி இருக்கும் என்பதால் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கவும் பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு சம்பளமாக 25 கோடி மட்டுமே அட்வான்ஸ் வாங்கிய ரஜினிகாந்த் மொத்த படத்தையும் முடித்து கொடுத்துவிட்டாராம். தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்க முடிவு செய்துள்ளதாம்.
ஆனால் இன்னும் படம் வெளியாக 8 நாட்கள் இருக்கும் நிலையில் இதுவரை படத்தின் ப்ரீ பிசினஸிலே 500 கோடி வருமானத்தை கொடுத்துவிட்டதால் ரஜினி தரப்பு 200 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறார்களாம். இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.