பரபரன்னு நடக்கும் கூலி பட ஷூட்டிங்!.. எப்போ ரிலீஸ் தெரியுமா?!...

by Murugan |
coolie rajni
X

Coolie: ஜெயிலர் 2 படம் கொடுத்த மெகா வெற்றி ரஜினியை வேகமாக ஓட வைத்திருக்கிறது. வேட்டையன், லால் சலாம், கூலி என தொடர்ந்து நடிக்க துவங்கினார். இதில் லால் சலாம் படத்தை அவரின் மகள் ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு கவுரவ வேடம்தான். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

வேட்டையன்: இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வேட்டையன் படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா.ச.ஞானவேல் இயக்கியிருந்தார். ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி செய்யும் தவறு பற்றி இப்படம் பேசியது. படம் நன்றாகவே உருவாக்கப்பட்டிருந்தாலும் ரஜினி தவறு செய்கிறார் என்கிற கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

ஒருபக்கம், இந்த படத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்தனர். எனவே, படத்தின் வசூல் பாதித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷுடன் ரஜினி கை கோர்த்திருப்பதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.


விக்ரம் படத்தின் வெற்றி: ஏற்கனவே லோகேஷும் ரஜினியும் இணைவதாக இருந்தது. இந்த படத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் ரஜினி பின் வாங்கிவிட லோகேஷின் இயக்கத்தில் கமலே நடித்து விக்ரம் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படம் கொடுத்த நம்பிக்கைதான் லோகேஷ் இயக்கத்தில் நடிக்காலம் என்கிற நம்பிக்கையை ரஜினிக்கு கொடுத்தது. வழக்கம்போல் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக கூலி படம் உருவாகி வருகிறது. இப்படம் தொடர்பாக லோகேஷ் வெளியிட்ட வீடியோக்களும் ரஜினி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

கூலி ரிலீஸ் தேதி: கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சில நாட்கள் நடந்தது. இதில், ரஜினி, சத்தியராஜ், கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது சென்னை துறைமுகத்தில் சில காட்சிகளை எடுத்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என சொல்கிறார்கள். எனவே, வருகிற மே மாதம் கூலி படம் ரிலீஸாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறது படக்குழு.

Next Story