ED வளையத்தில் சிக்கிய ஆகாஷ்.. இட்லிகடை படத்திற்கு வந்த சிக்கல்..

akash
தமிழ் சினிமாவே சில நாட்களாக பரபரப்பாக இருக்கிறது. அதற்கு காரணம் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் பாஸ்கரன். அவருடைய அலுவலகத்தில் ED ரெய்டு. அதுமட்டுமல்ல அவரும் தலைமறைவு ஆகிவிட்டார். இப்போது எல்லோருடைய கேள்வி என்னவென்றால் ரெய்டு நடக்கும்போது யாருமே தலைமறைவாக மாட்டார்கள். ஆனால் இவர் அந்த மாதிரி தலைமறைவாகி விட்டாரே. அடுத்து என்ன நடக்கும் என்பது மாதிரியான ஒரு கேள்வி இருக்கிறது .
நாம் விசாரித்ததில் EDயை பொருத்தவரைக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் இவர் வரவில்லை என்றால் அவருடைய மொத்த சொத்தையும் நெருங்குவார்கள். இவருடைய சொத்து என்பது இவர் எடுத்துக் கொண்டிருக்கும் பராசக்தி, இட்லி கடை ,அடுத்து அவரே இயக்குகிற இதயம் முரளி போன்ற படங்கள்தான் .அநேகமாக ED இந்த 3 படங்களை நெருங்கும் மாதிரியான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மூன்று படங்களையும் இவரால் ரிலீஸ் பண்ண முடியாமல் கூட போய்விடும். இதற்கிடையில் தனுஷை பொருத்தவரைக்கும் நாம் ஒரு படத்தை இயக்குகிறோம். அவர்களுக்கு இருக்கிற பிரச்சினையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள். நமக்கு கொடுக்கிற வேலையை சரியாக செய்து விட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.
அந்த வகையில் இட்லிகடை படத்தில் எடிட்டிங் பணிகள் முழுவதையும் முடித்து விட்டாராம் தனுஷ். அதனுடைய ரிலீஸ் தேதியையும் கன்ஃபார்ம் பண்ணி விட்டார்கள். அதற்குள் நம்முடைய வேலையை முடித்து விட வேண்டும் என தனுஷ் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறாராம். ஒரு வேளை ED பிரச்சினை முடியட்டும் என நினைத்து தனுஷ் வேற படத்திற்கு போய்விட்டால் இங்கு பிரச்சினையும் சரியாகிவிட்டால் அவர்கள் கூப்பிடும் போது தனுஷ் ரெடியாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விடும். அதனால் தான் இட்லி கடை படத்தில் உள்ள எடிட்டிங் வேலைகளை எல்லாம் முடித்து விட்டாராம் தனுஷ். எடிட்டிங் பணிகள் எல்லாம் முடித்துவிட்டு ஜூன் முதல் வாரத்தில் அந்த படத்திற்கான ஆர் ஆர் பணிகளை எல்லாம் தொடங்க இருக்கிறார்கள். இதற்கு இடையில் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான பிரச்சனை எப்போது முடியும் என தெரியவில்லை. ஒருவேளை முடியவில்லை என்றால் ரிலீஸ் தேதியில் இழுபறி இருக்கலாம் என தெரிகிறது.