பொங்கல் ட்ரீட் வச்சிட்டாரே தனுஷ்!. ‘இட்லி கடை’ பட புதிய போஸ்டர்கள் செம வைப்!..
Idli kadai: கோலிவுட்டின் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது ஆடுகளம், வட சென்னை, கர்ணன், அசுரன் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர். சிறந்த நடிப்புக்கான தேசிய விருதை இரண்டு முறை வாங்கியிருக்கிறார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் மீது பல தவறான விமர்சனங்களும் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் தனுஷ் எந்த விளக்கமும் கொடுப்பது இல்லை.
படம் நடிப்பது, இயக்குவது என சினிமா தொடர்பான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மற்ற நடிகர்களை போல இடைவெளி விடாமல் ஒரு படம் முடிந்தவுடனே அடுத்த படம் என வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். திருச்சிற்றம்பலம் முடித்தவுடன் ராயன் படத்தை இயக்கப்போனார்.
அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அது முடிந்துவுடன் ஏற்கனவே தான் இயக்கி கிடப்பில் கிடந்த ‘நிலவுக்குள் என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கப்போனார். அதன்பின் ‘இட்லி கடை’ என்கிற படத்தை இயக்கப்போனார். இப்போது அந்த படம் உருவாகி வருகிறது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின் நித்யா மேனன் தனுஷுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு தனுஷ் வெளியிட்டார். ராஜ்கிரணுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு மேலும் இரண்டு போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டுருக்கிறார்.
மரத்தடியில் கன்னுக்குட்டியுடன் அமர்ந்திருப்பது போலவும், நித்யாமேனனுடன் ரொமான்ஸ் செய்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. அனேகமாக இது அந்த படத்தில் வரும் பாடல் காட்சியாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் குபேரா என்கிற தெலுங்கு படத்திலும் தனுஷ் முடித்திருக்கிறார். இந்த வருடம் நிலவுக்குள் என் மேல் என்னடி கோபம், இட்லி கடை, குபேரா ஆகிய 3 படங்கள் வெளியாகவுள்ளது.