{"vars":{"id": "76339:5011"}}

கர்நாடக அரசின் விருது பெற்ற தமிழ் இயக்குனர்

கர்நாடக அரசின் விருது பெற்ற தமிழ் இயக்குனர்

 

கொன்றால் பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் தயாள் பத்மநாபன். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கன்னடத்தில் 19 படங்களையும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.  தமிழில் கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம்(இப்படம் ஓடிடியில் வெளியானது)  ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

புகழ்பெற்ற கன்னட நாடகமொன்றைத் தழுவி, இவர் 2018-ஆம் ஆண்டு தயாரித்து-கதை, திரைக்கதை எழுதி இயக்கிய கன்னட படம் ஆ கராள ராத்திரி. இதே படத்தை  இதனை அனகனகா ஒ அதித்தி என்ற பெயரில் தெலுங்கிலும், கொன்றால் பாவம் என்ற பெயரில் தமிழிலும் இயக்கினார்.

2018-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதுக்காக ஆ கராள ராத்திரி படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி   நேற்று(நவம்பர் 3-ம் தேதி) மைசூர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கர்நாடக முதலமைச்சர். சித்தராமையா கையால் அவ்விருதினை தயாள் பத்மநாபன் பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், கர்நாடக அரசின் திரைப்பட விருது பெறுவது குறிப்பிடட்தக்கது.